காமன்வெல்த் போட்டிகளில் வென்றவர்களுக்கு ஊக்கத்தொகை| Dinamalar

காமன்வெல்த் போட்டிகளில் வென்றவர்களுக்கு ஊக்கத்தொகை

Added : ஆக 17, 2022 | |
சென்னை : சமீபத்தில் நிறைவடைந்த, 22வது காமன்வெல்த் போட்டி மற்றும் காமன்வெல்த் வாள் வீச்சு 'சாம்பியன்ஷிப்' போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனை, பயிற்சியாளர் ஆகியோருக்கு, 4.31 கோடி ரூபாய்க்கான காசோலைகளை, முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார்.இங்கிலாந்தின் பர்மிங்காமில், கடந்த மாதம் 28 முதல் இம்மாதம் 8ம் தேதி வரை, 22வது காமன்வெல்த் போட்டி நடந்தது.இதில் இந்திய அணி



சென்னை : சமீபத்தில் நிறைவடைந்த, 22வது காமன்வெல்த் போட்டி மற்றும் காமன்வெல்த் வாள் வீச்சு 'சாம்பியன்ஷிப்' போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனை, பயிற்சியாளர் ஆகியோருக்கு, 4.31 கோடி ரூபாய்க்கான காசோலைகளை, முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார்.



இங்கிலாந்தின் பர்மிங்காமில், கடந்த மாதம் 28 முதல் இம்மாதம் 8ம் தேதி வரை, 22வது காமன்வெல்த் போட்டி நடந்தது.இதில் இந்திய அணி சார்பில், தமிழகத்தை சேர்ந்த சரத்கமல், மேஜைப்பந்து விளையாட்டில், மூன்று தங்கம், ஒரு வெள்ளி என, நான்கு பதக்கங்கள் வென்றார். அவருக்கு உயரிய ஊக்கத் தொகையாக, 1.80 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.


மேஜைப்பந்து விளையாட்டில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் வென்ற சத்தியனுக்கு, 1 கோடி ரூபாய்; ஸ்குவாஷ் போட்டியில், இரண்டு வெண்கலப் பதக்கங்கள் வென்ற சவ்ரவ் கோஷலுக்கு, 40 லட்சம் ரூபாய்; ஸ்குவாஷ் போட்டியில், ஒரு வெண்கலம் வென்ற தீபிகா பல்லிக்கலுக்கு, 20 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.பதக்கங்கள் வென்ற விளையாட்டு வீரர்களின் பயிற்சியாளர்கள் ஐந்து பேருக்கு, ஊக்கத் தொகையாக, 51 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.


லண்டனில் நடந்த காமன்வெல்த் வாள் வீச்சு 'சாம்பியன்ஷிப்' போட்டியில், ஒரு தங்கம், ஒரு வெண்கலம் வென்ற பவானிதேவிக்கு, ஊக்கத் தொகையாக, 35 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.இந்தியாவின் 75வது 'கிராண்ட் மாஸ்டர்' ஆக பட்டம் வென்றுள்ள பிரணவ் வெங்கடேசுக்கு, 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.


இவர்களுக்கு நேற்று தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் காசோலைகளை வழங்கி, வாழ்த்து தெரிவித்தார்.அமைச்சர் மெய்யநாதன், தலைமைச் செயலர் இறையன்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலர் அபூர்வா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமை செயல் அலுவலர் கார்த்திகேயன் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X