ரேஷன் கடைகளில் சர்வர் பாதிப்பு| Dinamalar

ரேஷன் கடைகளில் 'சர்வர்' பாதிப்பு

Added : ஆக 17, 2022 | கருத்துகள் (2) | |
சென்னை : ரேஷன் கடைகளில் நேற்று, 'சர்வர்' பாதிப்பு காரணமாக, விற்பனை முனைய கருவிகள்இயக்கம் முடங்கியதால், அத்தியாவசிய உணவு பொருட்களை வாங்க முடியாமல் கார்டுதாரர்கள் சிரமப்பட்டனர்.தமிழக ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களின் விரல் ரேகை பதிவு செய்து, அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன. சுதந்திர தினத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் ரேஷன் கடைகளுக்கு
ரேஷன் கடைகளில் 'சர்வர்' பாதிப்பு

சென்னை : ரேஷன் கடைகளில் நேற்று, 'சர்வர்' பாதிப்பு காரணமாக, விற்பனை முனைய கருவிகள்இயக்கம் முடங்கியதால், அத்தியாவசிய உணவு பொருட்களை வாங்க முடியாமல் கார்டுதாரர்கள் சிரமப்பட்டனர்.தமிழக ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களின் விரல் ரேகை பதிவு செய்து, அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் ரேஷன் கடைகளுக்கு விடுமுறையாக இருந்தது.இதனால், நேற்று காலை முதல் கார்டுதாரர்கள் பலரும் பொருட்களை வாங்க, ரேஷன் கடைகளுக்கு வந்தனர். காலை, 11:15 மணிக்கு மேல், 'சர்வர்' பாதிப்பு காரணமாக, விற்பனை முனைய கருவிகள் இயங்கவில்லை.எனவே, விரல் ரேகை பதிவு செய்வது, ரேஷன் கார்டை, 'ஸ்கேன்' செய்வது, ரேஷன் கார்டு எண்ணை பதிவிடுவது என, எந்த முறையிலும் விற்பனையை பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால், கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வழங்க முடியவில்லை.



இந்த பிரச்னை மதியம் வரை நீடித்ததால், கார்டுதாரர்கள் பொருட்கள் வாங்க முடியாமல் சிரமப்பட்டனர். விற்பனை முனைய கருவிகளின் இயக்கம் அடிக்கடி முடங்குவதால், ரேஷன் கார்டுதாரர்கள் பாதிக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X