கை, கால்களை உடையுங்கள்: சிவசேனா எம்.எல்.ஏ., பேச்சால் சர்ச்சை| Dinamalar

கை, கால்களை உடையுங்கள்: சிவசேனா எம்.எல்.ஏ., பேச்சால் சர்ச்சை

Updated : ஆக 17, 2022 | Added : ஆக 17, 2022 | கருத்துகள் (14) | |
மும்பை: 'உங்களை யாராவது எதிர்த்துப் பேசினால், அவர்களது கை, கால்களை உடையுங்கள். உங்களை சட்ட நடவடிக்கைகளிலிருந்து காக்க வேண்டியது, என் பொறுப்பு' என, சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ., ஒருவர் பேசியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில், சிவசேனா அதிருப்தி குழு, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா
Break Legs, Ensure Bail, Team Shinde MLA, Sena Tussle, கை, கால், சிவசேனா, எம்எல்ஏ, சர்ச்சை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மும்பை: 'உங்களை யாராவது எதிர்த்துப் பேசினால், அவர்களது கை, கால்களை உடையுங்கள். உங்களை சட்ட நடவடிக்கைகளிலிருந்து காக்க வேண்டியது, என் பொறுப்பு' என, சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ., ஒருவர் பேசியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில், சிவசேனா அதிருப்தி குழு, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா நிர்வாகிகளுக்கும், அதிருப்தி குழுவைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே, மாநிலம் முழுதும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ., பிரகாஷ் சுர்வே, சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசியதாவது: உங்களைப் பற்றி யாராவது, ஏதாவது பேசினால், அவர்களது கைகளை அடித்து உடையுங்கள்.



கைகளை உடைக்க முடியவில்லை எனில், கால்களை உடைத்து நொறுக்குங்கள். சட்ட நடவடிக்கைகளிலிருந்து காக்க வேண்டியது, என் பொறுப்பு. எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். எல்லா உதவிகளையும், உங்களுக்கு நான் செய்வேன். இவ்வாறு அவர் பேசியுள்ளார். இந்த விவகாரம், மஹாராஷ்டிராவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.இது தொடர்பாக, பிரகாஷ் சுர்வேக்கு எதிராக, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



சமையல் ஊழியருக்கு 'பளார்'

மஹாராஷ்டிராவில், சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ., சந்தோஷ் பங்கர், ஹிங்கோலி மாவட்டத்தில் உள்ள பள்ளியின் மதிய உணவு சமையல் அறையை, நேற்று ஆய்வு செய்தார். அப்போது, உணவு தரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறி, அங்கிருந்த ஊழியரை, 'பளார், பளார்' என, இரண்டு முறை அறைந்தார். இது குறித்து, சந்தோஷ் பங்கர் கூறுகையில், ''ஏழை மாணவர்கள் நலனுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை, இதுபோன்ற ஊழியர்கள் கொள்ளை அடிக்கின்றனர். தரமற்ற பொருட்களில், மதிய உணவு தயார் செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X