சென்னையில் வீடுகள் விலை 1 சதவீதம் மட்டுமே உயர்வு

Updated : ஆக 17, 2022 | Added : ஆக 17, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி: கடந்த ஏப்ரல் - ஜூன் காலாண்டில், வீடுகளின் சராசரி விலை 5 சதவீதமாக அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. சென்னையில் 1 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.ரியல் எஸ்டேட் சங்கங்களின் கூட்டமைப்பான கிரடாய், ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான 'கோலியர்ஸ் இந்தியா' மற்றும் தரவு பகுப்பாய்வு நிறுவனமான 'லயாசஸ் போரஸ்' ஆகியவை இணைந்து,
சென்னை வீடு விலை,ரியல் எஸ்டேட், கோலியர்ஸ் இந்தியா, லயாசஸ் போரஸ், Chennai House Price, Real Estate, Colliers India, Lyases Porus,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: கடந்த ஏப்ரல் - ஜூன் காலாண்டில், வீடுகளின் சராசரி விலை 5 சதவீதமாக அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. சென்னையில் 1 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.

ரியல் எஸ்டேட் சங்கங்களின் கூட்டமைப்பான கிரடாய், ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான 'கோலியர்ஸ் இந்தியா' மற்றும் தரவு பகுப்பாய்வு நிறுவனமான 'லயாசஸ் போரஸ்' ஆகியவை இணைந்து, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. எட்டு பெரு நகரங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்ட அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: வீடுகளின் தேவை மீட்சி கண்டது, கட்டுமான செலவு அதிகரித்தது ஆகியவை, வீடுகள் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது.கடந்த ஜூன் காலாண்டில், வீடுகள் விலை சராசரியாக 5 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.


latest tamil news


டில்லி தலைநகர் பிராந்தியத்தில் தான், அதிகபட்சமாக 10 சதவீதம் அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு முந்தைய காலத்தை விட, இந்த எட்டு நகரங்களில் வீடுகள் விலை தற்போது அதிகரித்துள்ளது.ஆமதாபாத், பெங்களூரு போன்ற நகரங்களில் முறையே, 9 மற்றும் 4 சதவீதம் அதிகரித்துள்ளது. இருப்பினும், சென்னையை பொறுத்தவரை, ஒரே 1 சதவீதம் அளவுக்கு மட்டுமே அதிகரித்துள்ளது குறிப்பிடத் தகுந்தது. இங்கு, ஒரு சதுர அடி 7,129 ரூபாய் என்ற அளவில் உயர்ந்துள்ளது.

மத்திய சென்னை பகுதியில் 13 சதவீதம் அளவுக்கு விலை சரிந்துள்ளது. அதேசமயம், மேற்கு பூவிருந்தவல்லியில், இதுவரை இல்லாத வகையில், 13 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டு உள்ளதை அடுத்து, அதன் பாதிப்புகள் வீடுகள் விற்பனையில் ஓரளவு இருக்கும். கடந்த 10 ஆண்டுகளாக வீடுகள் விலையில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லாமல் இருந்தது. தற்போது வீடு கட்டுவதற்கு தேவைப்படும் பொருட்களுக்கான விலை அதிகரித்துள்ளதை அடுத்து, கட்டுமான நிறுவனங்களுக்கு விலையை அதிகரிப்பதை தவிர வேறு வாய்ப்புகள் இல்லை. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
18-ஆக-202200:53:09 IST Report Abuse
Aarkay வாங்கத்தான் ஆளில்லை. UDS-ற்கு மட்டுமே உண்மை மதிப்பு. இவர்கள் கட்டும் லட்சணத்திற்கு பூஜ்யம் மதிப்புதான். ஆரம்பத்தில் பளபளக்கும் வீடு, காலம் செல்ல செல்ல பல் இளித்து தன் உண்மை நிலையை காட்டும்.
Rate this:
Cancel
Bhasskar Kg - chennai,இந்தியா
17-ஆக-202220:08:26 IST Report Abuse
Bhasskar Kg ஒப்பீடு சரியில்லை என்றே தோன்றுகிறது
Rate this:
Cancel
sing venky - Stanford University, Melnopark,யூ.எஸ்.ஏ
17-ஆக-202218:02:07 IST Report Abuse
sing venky சென்னை ரியல் எஸ்டேட் பெரிய ஏமாற்று தொழில். போக்குவரத்து, மருத்துவம், கல்வி என எந்த அடிப்படை வசதியும் இல்லாத ஒரு இடத்தில கவர்ச்சிகரமாக வீடுகள் கட்டி கோடி கணக்கில் விற்பது? பெங்களூரை ஒப்பிட்டால் சென்னையில் வீடு வாங்குவது கோமாளித்தனம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X