பெண் வக்கீல் புகார் : 7 பேர் மீது வழக்கு

Added : ஆக 17, 2022 | |
Advertisement
ஆத்துார் : பெண் வக்கீல் புகாரில், நீதிமன்ற உத்தரவுப்படி, கணவர், மாமனார், மாமியார் உள்பட, ஏழு பேர் மீது, போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.நாமக்கல் மாவட்டம், ராசிபுரம், முத்துகாளிப்பட்டியை சேர்ந்த, கணேசன் மகள் ஹேமா, 38. சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீலாக பணி புரிகிறார்.இவர், கடந்த ஜூலை 28ல், ஆத்துார் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில்



ஆத்துார் : பெண் வக்கீல் புகாரில், நீதிமன்ற உத்தரவுப்படி, கணவர், மாமனார், மாமியார் உள்பட, ஏழு பேர் மீது, போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம், முத்துகாளிப்பட்டியை சேர்ந்த, கணேசன் மகள் ஹேமா, 38. சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீலாக பணி புரிகிறார்.இவர், கடந்த ஜூலை 28ல், ஆத்துார் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருந்ததாவது:
சேலம் மாவட்டம், ஆத்துார், பைத்துாரை சேர்ந்த கந்தசாமி மகன் சுரேஷ், 37. இவருக்கும், எனக்கும், 2020 நவ., 26ல் திருமணம் நடந்தது. பின், கணவர், அவரது குடும்பத்தினர், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினர்.கர்ப்பம் தரித்த எனக்கு, அவர்களின் கொடுமையால் வயிற்றில் இருந்த சிசு இறந்தது. பின், கட்டாயப்படுத்தி விவாகரத்து பெற முயன்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
விசாரித்த நீதிமன்றம், வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க, ஆத்துார் ஊரக போலீசாருக்கு உத்தரவிட்டது.அதன்படி, கணவர் சுரேஷ், 37, மாமனார் கந்தசாமி, 68, மாமியார் ஜெயமணி, 54, உறவினர்கள் உட்பட ஏழு பேர் மீது, 13 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X