சென்னை வங்கியில் கொள்ளை விழுப்புரத்தில் நகை பை மீட்பு

Added : ஆக 17, 2022 | |
Advertisement
விழுப்புரம் : சென்னை வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை, தனிப்படை போலீசார் விழுப்புரத்தில் மீட்டனர். இது தொடர்பாக வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.சென்னை அரும்பாக்கம் ரசாக் கார்டன் பகுதியில், 'பெடரல்' வங்கியின் தங்க நகை கடன் பிரிவான, 'பெட் பாங்க்' என்ற கிளை செயல்பட்டு வருகிறது.இங்கு கடந்த 13ம் தேதி பட்டப்பகலில் நுழைந்த மர்ம நபர்கள், 20 கோடி



விழுப்புரம் : சென்னை வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை, தனிப்படை போலீசார் விழுப்புரத்தில் மீட்டனர். இது தொடர்பாக வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை அரும்பாக்கம் ரசாக் கார்டன் பகுதியில், 'பெடரல்' வங்கியின் தங்க நகை கடன் பிரிவான, 'பெட் பாங்க்' என்ற கிளை செயல்பட்டு வருகிறது.இங்கு கடந்த 13ம் தேதி பட்டப்பகலில் நுழைந்த மர்ம நபர்கள், 20 கோடி ரூபாய் மதிப்பிலான 31.7 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இவ்வழக்கில், இதே வங்கியின் வில்லிவாக்கம் கிளை மண்டல மேலாளரான பாடியைச் சேர்ந்த முருகன், 37; அவரது கூட்டாளிகள் வில்லிவாக்கம் சந்தோஷ், 30; பாலாஜி, 28; மற்றும் செந்தில், 30 ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஒரு பெண்ணிடம் நகை பை கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து, அப்பெண்ணை பிடித்து போலீசார் விசாரித்தனர்.அப்போது, விழுப்புரம் - செஞ்சி நெடுஞ்சாலை ஒட்டியுள்ள குண்டலப்புலியூரைச் சேர்ந்த முருகன் மகன் இளையராஜா, 20, என்பவரிடம் நகை பை இருப்பதாக கூறினார்.இதையடுத்து சென்னை தனிப்படை போலீசார், இளையராஜா வீட்டிற்கு நேற்று காலை வந்தனர். ஒரு துணி பை முழுதும் நகைகள் இருந்ததை மீட்டனர். மேலும், இளையராஜாவை விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வந்தனர்.
கொரோனா காலத்தில், சென்னை கோட்டூர்புரத்தில் இளையராஜா தங்கி வேலை செய்துள்ளார்.அங்கு, பழக்கமான அப்பெண், இளையராஜாவை முண்டியம்பாக்கத்திற்கு வரவழைத்துள்ளார்.அந்த பெண், குற்றாலத்திற்கு செல்வதாகக் கூறி ஒரு பையை கொடுத்து, வைத்திருக்குமாறு கூறியதால், அதை தனது வீட்டில் வைத்திருந்ததாக இளையராஜா கூறியுள்ளார்.தொடர்ந்து அவரிடம் விசாரணை நடக்கிறது.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X