'ஜென்டில்மேன்' பாணியில் வங்கி கொள்ளை: முக்கிய குற்றவாளி முருகன் வாக்குமூலம்

Updated : ஆக 17, 2022 | Added : ஆக 17, 2022 | கருத்துகள் (26) | |
Advertisement
சென்னை:சென்னையில் நடந்த வங்கி கொள்ளையில், முக்கிய குற்றவாளி முருகன் உட்பட நான்கு பேர் சிக்கிய நிலையில், மேலும் ஒருவரை போலீசார் கைது செய்து, 10 கிலோ நகைகளை மீட்டனர்.கைதுசென்னை, அரும்பாக்கம், ரசாக் கார்டன் பகுதியில், 'பெடரல்' வங்கியின் தங்க நகைக் கடன் பிரிவான, 'பெட் பாங்க்' என்ற கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு, 13ம் தேதி பட்டப்பகலில் மர்ம நபர்கள் புகுந்து,
வங்கி_கொள்ளை, முக்கிய_குற்றவாளி, முருகன்_வாக்குமூலம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை:சென்னையில் நடந்த வங்கி கொள்ளையில், முக்கிய குற்றவாளி முருகன் உட்பட நான்கு பேர் சிக்கிய நிலையில், மேலும் ஒருவரை போலீசார் கைது செய்து, 10 கிலோ நகைகளை மீட்டனர்.கைது


சென்னை, அரும்பாக்கம், ரசாக் கார்டன் பகுதியில், 'பெடரல்' வங்கியின் தங்க நகைக் கடன் பிரிவான, 'பெட் பாங்க்' என்ற கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு, 13ம் தேதி பட்டப்பகலில் மர்ம நபர்கள் புகுந்து, ஊழியர்களை கட்டிப் போட்டு, 20 கோடி ரூபாய் மதிப்பிலான 31.7 கிலோ தங்க நகைகளை, கொள்ளை அடித்து சென்றன சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் அன்பு தலைமையிலான, தனிப்படை போலீசார், அதே வங்கியின் ஊழியரும், முக்கிய குற்றவாளியுமா, வில்லிவாக்கம் முருகன், 37, மற்றும் அவரது கூட்டாளிகள் பாலாஜி, 28, சந்தோஷ், 30, செந்தில்குமார், 30, ஆகிய மூவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 8.5 கோடி ரூபாய் மதிப்பில், 18 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டன. இரண்டு கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


நகைகள் மீட்பு


முருகனிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், வில்லிவாக்கத்தைச் சேர்ந்த அவரது மற்றொரு கூட்டாளி சூர்யா, 35, என்பவரிடம், 10 கிலோ தங்க நகைகளை கொடுத்தது தெரிய வந்தது.மேலும், அந்த நகைகளை, விழுப்புரம் மாவட்டத்தில் பதுக்கி வைத்து இருப்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, சூர்யாவை நேற்று கைது செய்து, விழுப்புரம் மாவட்டம், குண்டலப்புலியூரில் இளையராஜா, 20, என்பவரின் வீட்டில் 10 கிலோ நகைகளை மீட்டனர்.


latest tamil news


கொரோனா பரவல் அதிகமாக இருந்தபோது, இளையராஜா சென்னை கொரட்டூரில் தங்கி இருந்தார். அப்போது, இவருக்கு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண் தான், 10 கிலோ நகையை கொடுத்து தப்பி உள்ளார். அவர் யார் என்பது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், சூர்யா, கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த நகை பட்டறை உரிமையாளர் ஸ்ரீவத்சா, 42, என்பவரிடம் நகையை விற்க முயன்றுள்ளார். இதனால், இவரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


ஆசை


போலீசாரிடம் முருகன் அளித்துள்ள வாக்குமூலம்:சினிமா படங்களை தயாரிக்க வேண்டும்; அதில் நானும் என் கூட்டாளிகளும் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். வங்கியில் வேலை பார்த்ததால் கட்டுக்கட்டாக பணம், கிலோ கணக்கில் நகைகளை பார்த்ததும், கொள்ளையடிக்கும் ஆசை வந்து விட்டது. அது பற்றி, என்னுடன் தினமும் உடற்பயிற்சி செய்யும் பள்ளி நண்பர்களிடம் தெரிவித்தேன். அவர்களும் சம்மதம் தெரிவித்தனர். கொள்ளை குறித்த சினிமா படங்களை பார்த்தோம். ஜென்டில்மேன் படத்தில், அர்ஜுன் கொள்ளையடிப்பது போல செய்ய முடிவு செய்தோம். கொள்ளையடித்த வங்கியின் எச்சரிக்கை அலாரத்தின் கட்டுப்பாட்டு மையம், புதுடில்லியில் உள்ளது.


திட்டம்


இணையதளம் உதவியுடன் அதை துண்டித்தேன். வங்கி லாக்கரின் சாவிகள், வங்கியில் தான் இருந்தன. அதனால், 31.7 கிலோ நகைகளை கொள்ளையடித்து தப்பினோம். நகைளை பிரித்துக் கொண்டோம். போலீசார் எப்படியும் என்னை பிடித்து விடுவர். இதனால், நகை விற்ற பணத்தில், மற்றவர்கள் என்னை ஜாமினில் எடுக்க வேண்டும். யார் பிடிபட்டாலும், அவர்களை மற்றவர்கள் ஜாமினில் எடுக்க வேண்டும் என பேசி திட்டம் தீட்டியிருந்தோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
17-ஆக-202220:47:26 IST Report Abuse
sankaranarayanan ஆகஸ்டு பதிமூன்றாம்தேதி இம்மாத இரண்டாவது சனிக்கிழமை ஆயிற்றே. வங்கிகள் அன்று ஓய்வுநாள் இல்லையா? எப்படி இந்த வங்கிகிளை மட்டும் திறந்து வைக்கப்பட்டது. இதில் எதோ மர்மம் இருக்கிறது. எங்கேயோ இடிக்கிறது. புலனாய்வு நன்றாக நடக்க வேண்டும்.
Rate this:
Cancel
Indian - chennai,இந்தியா
17-ஆக-202219:53:26 IST Report Abuse
Indian எத்தனையோ படங்கள் நல்ல விஷயத்தை சொல்லியதே அதெல்லாம் உன் கண்ணிற்கு தெரியவில்லையப்பா . ஒரு தவறான வேலையே செய்து விட்டு அதெற்கு ஒரு விளக்கம் வேற
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
17-ஆக-202216:53:28 IST Report Abuse
தமிழ்வேள் உண்மையிலேயே நகைகள் கொள்ளை போயினவா ? அல்லது , டுபாக்கூர் வேலை கட்டி , கணக்கில் கொண்டுவருவதற்காக கொள்ளை என்று கதை கட்டி [சகல தரப்புக்கும் சில்லறை வெட்டி ]இன்சூரன்ஸ் கிளைம் செய்ய டிராமாவா ? - அதென்ன மலையாளத்தான் மட்டும் நகை அடகு நிறுவனம் மானாவாரியாக திறக்கிறான் ? அதில் தமிழகத்தில் மட்டும் கொள்ளை போகிறது ? எதோ மர்மமாக இருக்கிறது .....
Rate this:
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
18-ஆக-202200:15:05 IST Report Abuse
Fastrackதமிழன் டாஸ்பாக் சரக்கு வாங்க நகை மட்டுமா அடகு வைக்கிறான்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X