தேசியக்கொடி ஏற்ற மறுத்த ஹெச்.எம்.,: விசாரணைக்கு கல்வித்துறை உத்தரவு

Added : ஆக 17, 2022 | கருத்துகள் (28) | |
Advertisement
தர்மபுரி: சுதந்திர தினத்தன்று, பள்ளியில் தேசியக்கொடி ஏற்ற மறுத்த அரசு பள்ளி தலைமையாசிரியர் குறித்து விசாரிக்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.நாடு முழுதும் நேற்று முன்தினம் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. தர்மபுரி மாவட்டம், பேடரஹள்ளி அரசு பள்ளியில் நடந்த விழாவில், பள்ளி தலைமையாசிரியை தமிழ்செல்வி தேசியக்கொடியை ஏற்றவில்லை.மேலும், துணை தலைமை ஆசிரியர் முருகன்
தேசியக்கொடி, அரசு பள்ளி தலைமையாசிரியர் , 75வது சுதந்திர தின விழா , தலைமை ஆசிரியை தமிழ்செல்வி, Thesiya kodi, Government School Head mistress, 75th Independence Day Celebration, Headmistress Tamilselvi,

தர்மபுரி: சுதந்திர தினத்தன்று, பள்ளியில் தேசியக்கொடி ஏற்ற மறுத்த அரசு பள்ளி தலைமையாசிரியர் குறித்து விசாரிக்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுதும் நேற்று முன்தினம் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. தர்மபுரி மாவட்டம், பேடரஹள்ளி அரசு பள்ளியில் நடந்த விழாவில், பள்ளி தலைமையாசிரியை தமிழ்செல்வி தேசியக்கொடியை ஏற்றவில்லை.மேலும், துணை தலைமை ஆசிரியர் முருகன் ஏற்றிய தேசியக்கொடிக்கும் தலைமையாசிரியை மரியாதை செலுத்தாமல் இருந்துள்ளார்.

இதுகுறித்து, ஊர் மக்கள் அவரிடம் கேட்டபோது, 'உலகளாவிய கிறிஸ்துவ அமைப்பில் நான் உள்ளேன். யாகோபுக்கு மட்டும் தான் வணக்கம் செலுத்துவோம்' என தெரிவித்துள்ளார். நேற்று, பேடரஹள்ளி மக்கள், தர்மபுரி சி.இ.ஓ., அலுவலகத்தில் புகார் அளித்தனர்.அதன்படி விசாரிக்க, தர்மபுரி மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு உத்தரவிடப்பட்டது.

இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது: பேடரஹள்ளி தலைமை ஆசிரியை தமிழ்செல்வி, நான்கு ஆண்டுகளுக்கு மேல், இப்பள்ளியில் தலைமையாசிரியையாக உள்ளார். இவர், இப் பள்ளியில் பணிக்கு சேர்ந்தது முதல் தேசியக்கொடியை ஏற்றாததுடன், தேசியக்கொடிக்கும் மரியாதை செலுத்தவில்லை. மேலும், சமத்துவ பொங்கல் விழா நடத்தவும் அனுமதிக்கவில்லை. இவர் மீது, கல்வித்துறை யினர் நடவடிக்கை எடுக்காவிட்டால், எங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம். இவ்வாறு தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
17-ஆக-202219:30:28 IST Report Abuse
Rasheel மத வெறி
Rate this:
Cancel
Hari - chennai,இந்தியா
17-ஆக-202215:55:42 IST Report Abuse
Hari அட்டை பூச்சிகள் இலவசமாக கொள்ளை அடிக்கும் கும்மல் ,இந்தியர்களின் பணம் வேண்டும் ஆனால் யாக்கோபுக்கு மட்டும்..........
Rate this:
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
18-ஆக-202211:46:03 IST Report Abuse
தஞ்சை மன்னர் நீமட்டும் தான் வரி கட்டி அதில் இருந்து கேப்பதுபோல இருக்கு அவர் காட்டும் வரியில் இருந்துதான் உனக்கு ரேஷன் அரிசியும் சீனியும் கொடுக்கின்றனர்...
Rate this:
Cancel
Siddhanatha Boobathi - `Ajman,ஐக்கிய அரபு நாடுகள்
17-ஆக-202215:09:34 IST Report Abuse
Siddhanatha Boobathi ...............
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X