மவுனமாக இருந்தால், 'எதேச்சதிகார அரசு' என, வசைபாடாமல் இருப்பீர்களா?

Updated : ஆக 17, 2022 | Added : ஆக 17, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அறிக்கை:அ.தி.மு.க., ஆட்சி என்றால் அமைதி தவழும். தி.மு.க., ஆட்சியில் ரவுடியிசம் மட்டுமே நிலைக்கும் என்பது, பொதுமக்கள் ஒப்புக் கொள்ளும் உண்மை. நிர்வாகத் திறனற்ற தி.மு.க., அரசும், அதன் அமைச்சர்களும், எதிர்க்கட்சிகளுக்கு எதிராக நீண்ட அறிக்கையை கொடுப்பதற்கு பதில், மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதில் கவனம் செலுத்தினால், தமிழகம் மகிழ்ச்சி
பேச்சு_பேட்டி_அறிக்கை, அதிமுக, ஜெயகுமார்

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அறிக்கை:
அ.தி.மு.க., ஆட்சி என்றால் அமைதி தவழும். தி.மு.க., ஆட்சியில் ரவுடியிசம் மட்டுமே நிலைக்கும் என்பது, பொதுமக்கள் ஒப்புக் கொள்ளும் உண்மை. நிர்வாகத் திறனற்ற தி.மு.க., அரசும், அதன் அமைச்சர்களும், எதிர்க்கட்சிகளுக்கு எதிராக நீண்ட அறிக்கையை கொடுப்பதற்கு பதில், மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதில் கவனம் செலுத்தினால், தமிழகம் மகிழ்ச்சி அடையும்.

எதிர்க்கட்சிகளுக்கு பதில் தராமல் மவுனமாக இருந்தால், 'எதேச்சதிகார அரசு' என, வசைபாடாமல் இருப்பீர்களா?


தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் இளங்கோவன் பேட்டி:
நடப்பாண்டு ஜன., 1ம் தேதியிட்டு வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வை, ஆறு மாதம் தாமதமாக அறிவித்தது மட்டுமின்றி, ஆறு மாத நிலுவையையும் பறித்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி விட்டது தமிழக அரசு.தேர்தலில் அளித்த வாக்குறுதிப்படி, பழைய பென்ஷன் திட்டம், ஈட்டிய விடுப்புக்கான சரண்டர் தொகையை விரைந்து வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போதுள்ள நிதி நிலைமையில், தமிழக அரசு தருவதை ஏற்றுக் கொள்வதை தவிர, தங்களுக்கு வேற வழியில்லை!



latest tamil news



புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பேட்டி:
மதுவை ஒழிப்பதாக வாக்குறுதி அளித்தவர்கள், இதுவரை அதற்கான நடவடிக்கையை எடுக்காமல் உள்ளனர். இதனால், மாணவர்கள், இளைஞர்களின் வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது.

தங்களுக்கு இருக்கும் அக்கறையும், கவலையும், ஆளும் தரப்புக்கு இல்லாம போனது தான் இங்க சோகம்!


மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி:
தமிழக கவர்னர், அரசியலுக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும். ஆனால், நடிகர் ரஜினியுடன் அரசியல் பேச சம்மதித்தது, அவருடைய பொறுப்புகளை சரியாக பயன்படுத்தவில்லை என்பதற்கு உதாரணம்.

நம்ம ஊர் அரசியலை தான் பேசினோம்னு அவங்க எங்கயும் சொல்லலையே... இருவரும், அமெரிக்கா, ரஷ்யா, சீனா, தைவான் அரசியல் பற்றியும் பேசியிருக்கலாமே!


பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக, 2020-ம் ஆண்டில் தடைபட்ட அரசு பள்ளிகளின் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கான இலவச லேப்டாப் திட்டம், நிலைமை சீரடைந்த பின் இன்று வரை மீண்டும் துவங்கப்படாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. நடப்பாண்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படாததால், இத்திட்டம் கைவிடப்படுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டம் என்பதால், மீண்டும் இவங்க அமல்படுத்துவது கேள்விக்குறி தான் டாக்டர்!



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
V GOPALAN - chennai,இந்தியா
17-ஆக-202211:48:42 IST Report Abuse
V GOPALAN ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X