3.5 கி.மீ நீள சரக்கு ரயில்: இந்தியா அடுத்த சாதனை: அந்த வீடியோவை பாருங்க!

Updated : ஆக 17, 2022 | Added : ஆக 17, 2022 | கருத்துகள் (17) | |
Advertisement
கொர்பா: ஆறு என்ஜின்கள், 295 பெட்டிகளுடன் சுமார் 27 ஆயிரம் டன் நிலக்கரியுடன் இந்தியாவின் நீளமான சரக்கு ரயிலின் வெள்ளோட்டம் நடத்தி இந்திய ரயில்வே அசத்தி உள்ளது.சூப்பர் வாசுகி என்ற சரக்கு ரயில் இந்திய ரயில்வேயின் அங்கமாக உள்ளது. இந்த சரக்கு ரயில் தான் இந்தியாவிலேயே நீளமான சரக்கு ரயில் என்னும் சிறப்பை பெற்றுள்ளது. ஆம், இதன் நீளம், கொஞ்சநஞ்சமல்ல 3.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு
Indian Railways, Long Train, Super Vasuki, 295 wagons, இந்தியா, சரக்கு ரயில், சூப்பர் வாசுகி, 295 பெட்டிகள், நீளமான ரயில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கொர்பா: ஆறு என்ஜின்கள், 295 பெட்டிகளுடன் சுமார் 27 ஆயிரம் டன் நிலக்கரியுடன் இந்தியாவின் நீளமான சரக்கு ரயிலின் வெள்ளோட்டம் நடத்தி இந்திய ரயில்வே அசத்தி உள்ளது.

சூப்பர் வாசுகி என்ற சரக்கு ரயில் இந்திய ரயில்வேயின் அங்கமாக உள்ளது. இந்த சரக்கு ரயில் தான் இந்தியாவிலேயே நீளமான சரக்கு ரயில் என்னும் சிறப்பை பெற்றுள்ளது. ஆம், இதன் நீளம், கொஞ்சநஞ்சமல்ல 3.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு செல்கிறது. நாட்டின் 75வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவையொட்டி இந்த ரயிலின் வெள்ளோட்டத்தை தென்கிழக்கு ரயில்வே நடத்தி அசத்தி உள்ளது.


latest tamil newsசோதனை ஓட்டத்தின்போது, 6 என்ஜின்களுடன் கூடிய இந்த சரக்கு ரயில், 295 பெட்டிகளில் 27 ஆயிரம் டன் நிலக்கரி ஏற்றப்பட்டு, சத்தீஷ்கார் மாநிலம், கொர்பாவில் இருந்து நாக்பூரின் ராஜ்நந்த்காவ் வரை சென்றுள்ளது. மொத்தம் 267 கி.மீ தொலைவை இந்த ரயில், 11.20 மணி நேரத்தில் கடந்தது. இந்த சூப்பர் வாசுகி சரக்கு ரயிலில் ஏற்றப்படுகிற நிலக்கரியைக் கொண்டு ஒரு நாளில், 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
17-ஆக-202220:36:25 IST Report Abuse
கல்யாணராமன் சு. கொடுக்கப்பட்டுள்ள தூரம், காலம் போன்றவற்றை கணக்கிடும்போது மணிக்கு 23 கி.மீ. வேகத்தில் செல்வதாக தெரிகிறது ... ஆனால், காணொளியில் பார்க்கும்போது மிகவும் வேகமாக செல்வதாக தோன்றுகிறது .... தூரம் மற்றும் நேரத்தில் பிழையிருக்குமோ ??
Rate this:
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
18-ஆக-202203:39:56 IST Report Abuse
Fastrackஒரே ஆபரேஷனில் நான்கு ரெயில்கள் ஒரே இயக்கத்தில் செல்வதால் சேமிப்பு தான் . இந்த பிலாஸ்புர் துர்க் பகுதியில் மிக அதிக ரெயில்கள் இயக்கப்படுகின்றன .....
Rate this:
Cancel
Priyan Vadanad - Madurai,இந்தியா
17-ஆக-202219:35:19 IST Report Abuse
Priyan Vadanad ஆறு என்ஜின் 295 வேகன் அம்மாடியோவ். பெருமையாக இருக்கிறது. தேங்க்ஸ் தினமலர்.
Rate this:
Cancel
Trichy Mahadevan - Coimbatore,இந்தியா
17-ஆக-202219:23:06 IST Report Abuse
Trichy Mahadevan வாசுகி என்பது ஒரு நீளமான பாம்பின் பெயர். வாழ்க வளமுடன். பாரத் மாதா கி ஜெய். வந்தே மாதரம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X