ஊத்தங்கரை கவர்னர் தோப்பு பகுதியை சேர்ந்த, ரமேஷ், 32, பவித்ரா, 27, ஆகியோரின், 2 வயது குழந்தை, பரமேஷ்; வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாதபோது, நேற்று முன் தினம் மாலை உள்பகுதியில் தாளிட்டு சிக்கிக்கொண்டது. தகவலின்படி வந்த ஊத்தங்கரை தீயணைப்புத் துறையினர் வீட்டின் கதவை உடைக்க முயன்றும் முடியவில்லை.
இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த, 9ம் வகுப்பு படிக்கும் நவீன்குமார், 14, என்ற மாணவர், வீட்டின் ஜன்னல் கம்பி வழியாக உள்ளே சென்று, கதவின் உள்பக்க தாழ்பாளை திறந்து குழந்தையை காப்பாற்றினார். அதியமான் பள்ளியில் படிக்கும் அம்மாணவரை, அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் திருமால்முருகன், நிர்வாக அலுவலர் கணபதி ராமன், பள்ளி முதல்வர் கலைமணி மற்றும் ஆசிரியர்கள், மாணவனை
பாராட்டினர்.