காணொலி காட்சி மூலம் 18 துணை மின் நிலையங்கள் துவக்கி வைப்பு

Added : ஆக 17, 2022 | |
Advertisement
தர்மபுரி மாவட்டம், புலிக்கரை மற்றும் கிருஷ்ணாபுரம் பகுதியில் அமைக்கப்பட்ட, 18 துணை மின் நிலையங்களை, முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மின் தொடரமைப்பு சார்பில், பல்வேறு பகுதிகளில் துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணி நடந்தது. இந்த, 18 துணை மின் நிலையங்கள் மற்றும் ஏற்கனவே உள்ள, 55 துணை மின் நிலையங்களில்,


தர்மபுரி மாவட்டம், புலிக்கரை மற்றும் கிருஷ்ணாபுரம் பகுதியில் அமைக்கப்பட்ட, 18 துணை மின் நிலையங்களை, முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மின் தொடரமைப்பு சார்பில், பல்வேறு பகுதிகளில் துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணி நடந்தது. இந்த, 18 துணை மின் நிலையங்கள் மற்றும் ஏற்கனவே உள்ள, 55 துணை மின் நிலையங்களில், நான்கு கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திறன் மின்மாற்றிகள் மற்றும் நான்கு புதிய மின்பாதைகள் அமைக்கப்பட்டன.
இதன் பணிகள் முடிந்த நிலையில், நேற்று முதல்வர் ஸ்டாலின் இவற்றை காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார். இதனால், 23 ஆயிரத்து, 800 பேர் பயன்பெறுவர்.
புலிகரை துணை மின்
நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, முன்னாள் எம்.எல்.ஏ.,
இன்பசேகரனும், கிருஷ்ணாபுரம் துணை மின்நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, பாப்பிரெட்டிப்பட்டி, அ.தி.மு.க.,-எம்.எல்.ஏ., கோவிந்தசாமியும் தலைமை
வகித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X