வந்தது நீதானா... சொல்... சொல்... என்னுயிரே!: விஜயகாந்த் கட்சியினர் புலம்பல்

Updated : ஆக 17, 2022 | Added : ஆக 17, 2022 | கருத்துகள் (14) | |
Advertisement
சென்னை : கட்சி அலுவலகத்திற்கு வந்தது விஜயகாந்த் தானா என்ற சந்தேகம், தே.மு.தி.க.,வினருக்கு ஏற்பட்டு உள்ளது.தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், உடல் நலக் குறைவால் வீட்டிலேயே முடங்கி விட்டார். நீரிழிவு பிரச்னையால், அவரது காலில் மூன்று விரல்கள் அகற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னை கோயம்பேட்டில் உள்ள, கட்சி தலைமை அலுவலகத்தில், சுதந்திர தின விழாவில் கொடியேற்ற
DMDK, Vijayakanth, IndependenceDay, தேமுதிக, விஜயகாந்த், சுதந்திர தினம், தொண்டர்கள், சந்தேகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : கட்சி அலுவலகத்திற்கு வந்தது விஜயகாந்த் தானா என்ற சந்தேகம், தே.மு.தி.க.,வினருக்கு ஏற்பட்டு உள்ளது.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், உடல் நலக் குறைவால் வீட்டிலேயே முடங்கி விட்டார். நீரிழிவு பிரச்னையால், அவரது காலில் மூன்று விரல்கள் அகற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னை கோயம்பேட்டில் உள்ள, கட்சி தலைமை அலுவலகத்தில், சுதந்திர தின விழாவில் கொடியேற்ற விஜயகாந்த் வருவதாக தகவல் வெளியானது. அவரை காண தொண்டர்கள் திரண்டனர். விஜயகாந்தின் பிரசார வாகனம் அங்கு வந்ததும், தொண்டர்கள் கோஷம் எழுப்பினர். பிரசார வாகனத்தில் இருந்து, விஜயகாந்த் மனைவி பிரேமலதா, முதலில் தலையை காட்டினார். தொண்டர்களை பார்த்து கையசைத்தார்.


latest tamil news


தொடர்ந்து, உட்கார்ந்தபடியே விஜயகாந்த் தலையை காட்டினார். அவர் முக கவசமும், கண்ணாடியும் அணிந்திருந்தார். தொண்டர்களை பார்த்து கையை அசைத்தபோது, அவரது கண்ணாடி நழுவியது. சுதாரித்த பிரேமலதா, அவருக்கு கண்ணாடியை போட்டு விட்டார். பின், தேசிய கொடியேற்றுவதற்காக கயிறை பிரேமலதா இழுத்தார். அவரால் இழுக்க முடியாததால், மாநில துணை செயலர் பார்த்தசாரதி கொடியை இழுத்து கொடுத்தார். விஜயகாந்தின் முக கவசத்தை எடுத்து விட்டு, அவருக்கு பிரேமலதா, இனிப்பு ஊட்ட முயன்றார்.


latest tamil news


விஜயகாந்திடம் இருந்து எந்த அசைவும் இல்லை. மீண்டும் சுதாரித்த பிரேமலதா முக கவசத்தை லேசாக திறந்து, இனிப்பை வாயில் திணித்து மூடிவிட்டார். அப்போதும், விஜயகாந்திடம் எந்த அசைவும் இல்லை. பின், விஜயகாந்தின் பிரசார வாகனம் அங்கிருந்து வீட்டிற்கு புறப்பட்டு சென்றது.
இதனால், கட்சி அலுவலகத்திற்கு வந்தது விஜயகாந்தா என்ற சந்தேகம், அக்கட்சியினருக்கு ஏற்பட்டு உள்ளது. தேசிய கொடி ஏற்றுவதற்கு சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். ஆனால், பிரசார வாகனத்தில் இருந்தபடி, பிரேமலதா தேசிய கொடி ஏற்றியதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
18-ஆக-202200:32:28 IST Report Abuse
Aarkay எதற்காக இந்த அரசியல் ஆசை? கட்சியை கலைத்துவிடுவதே உத்தமம் சுதீஷ் முகத்திற்கும், பிரேமலதா முகத்திற்கும் யாரும் வோட்டு போடப்போவதில்லை. தயவு செய்து உங்கள் எட்டாக்கனி கனவுகளுக்காக அவரை கஷ்டப்படுத்தாதீர்கள்.
Rate this:
Cancel
அன்பு - தஞ்சை,கனடா
17-ஆக-202218:56:49 IST Report Abuse
அன்பு உடல்நிலை முடியாத நல்ல மனிதரை இன்னமும் நடிக்க வைத்து, பணம் சம்பாரிக்க குடும்பம் எத்தனிக்கிறது.
Rate this:
Cancel
இராம தாசன் - சிங்கார சென்னை,இந்தியா
17-ஆக-202218:53:09 IST Report Abuse
இராம தாசன் நன்றாக இருந்த மனிதரை நாசமாக்கிய சமூக ஊடகங்கள் - திராவிட மாடலின் சாதனை பட்டியலில் இதுவும் அடங்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X