பள்ளி பஸ் சக்கரத்தில் சிக்கி ஒன்றரை வயது சிறுமி பலி

Added : ஆக 17, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
ஆத்தூர்: சேலம் மாவட்டம், ஆத்தூர் அடுத்த, தலைவாசல் தாலுகா லத்துவாடி கிராமத்தை சேர்ந்த, கூலித்தொழிலாளி காசியின் நான்கு வயது மகள் வேதாசினி. இவர் வீரகனூரில் உள்ள விவேகானந்தா மெட்ரிக் பள்ளியில் எல்.கே.ஜி., படித்து வருகிறார். இன்று(ஆக.,17) , காலை அவரது தாய் சுதா, மகள் வேதாசினியை பள்ளிக்கு செல்லும் பஸ்ஸில் ஏற்றி விடுவதற்காக வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த, அவரது ஒன்றை வயது
பள்ளி, பஸ், சிக்கி ஒன்றை வயது சிறுமி , பலி

ஆத்தூர்: சேலம் மாவட்டம், ஆத்தூர் அடுத்த, தலைவாசல் தாலுகா லத்துவாடி கிராமத்தை சேர்ந்த, கூலித்தொழிலாளி காசியின் நான்கு வயது மகள் வேதாசினி. இவர் வீரகனூரில் உள்ள விவேகானந்தா மெட்ரிக் பள்ளியில் எல்.கே.ஜி., படித்து வருகிறார்.
இன்று(ஆக.,17) , காலை அவரது தாய் சுதா, மகள் வேதாசினியை பள்ளிக்கு செல்லும் பஸ்ஸில் ஏற்றி விடுவதற்காக வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த, அவரது ஒன்றை வயது இளைய மகள் பவனிகாஸ்ரீ வந்துள்ளதை கவனிக்கவில்லை. பஸ் டிரைவர், பஸ்ஸை எடுத்தவுடன் கீழே நின்று கொண்டிருந்த பவனிகாஸ்ரீ மீது பள்ளி பஸ் சக்கரம் ஏறியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் பஸ்ஸை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து வீரகனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று குழந்தையின் உடலை மீட்டு, பிரேத சோதனைக்கு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பொது மக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Priyan Vadanad - Madurai,இந்தியா
17-ஆக-202219:42:34 IST Report Abuse
Priyan Vadanad தவறு தாயுடையதா டிரைவருடையதா? இளிச்சவாயனை அமுக்கிடவேண்டியதுதான்.
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ
17-ஆக-202216:06:20 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN இது போன்ற சம்பவங்கள் ஆண்டுக்கு ஒன்றிரண்டாவது நடக்கின்றன ..... (மூத்தது பள்ளி செல்லும்போது இளையது வந்து வண்டிக்கடியில் சிக்குதல்)
Rate this:
Cancel
Manikandan Sivalingam - delhi,இந்தியா
17-ஆக-202213:02:52 IST Report Abuse
Manikandan Sivalingam வீட்டின்.... முன்னாள்...பள்ளி....வாகனம்.... நின்றால்.... இப்படி....தான்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X