பள்ளி பஸ் சக்கரத்தில் சிக்கி ஒன்றரை வயது சிறுமி பலி| Dinamalar

பள்ளி பஸ் சக்கரத்தில் சிக்கி ஒன்றரை வயது சிறுமி பலி

Added : ஆக 17, 2022 | கருத்துகள் (6) | |
ஆத்தூர்: சேலம் மாவட்டம், ஆத்தூர் அடுத்த, தலைவாசல் தாலுகா லத்துவாடி கிராமத்தை சேர்ந்த, கூலித்தொழிலாளி காசியின் நான்கு வயது மகள் வேதாசினி. இவர் வீரகனூரில் உள்ள விவேகானந்தா மெட்ரிக் பள்ளியில் எல்.கே.ஜி., படித்து வருகிறார். இன்று(ஆக.,17) , காலை அவரது தாய் சுதா, மகள் வேதாசினியை பள்ளிக்கு செல்லும் பஸ்ஸில் ஏற்றி விடுவதற்காக வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த, அவரது ஒன்றை வயது
பள்ளி, பஸ், சிக்கி ஒன்றை வயது சிறுமி , பலி

ஆத்தூர்: சேலம் மாவட்டம், ஆத்தூர் அடுத்த, தலைவாசல் தாலுகா லத்துவாடி கிராமத்தை சேர்ந்த, கூலித்தொழிலாளி காசியின் நான்கு வயது மகள் வேதாசினி. இவர் வீரகனூரில் உள்ள விவேகானந்தா மெட்ரிக் பள்ளியில் எல்.கே.ஜி., படித்து வருகிறார்.


இன்று(ஆக.,17) , காலை அவரது தாய் சுதா, மகள் வேதாசினியை பள்ளிக்கு செல்லும் பஸ்ஸில் ஏற்றி விடுவதற்காக வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த, அவரது ஒன்றை வயது இளைய மகள் பவனிகாஸ்ரீ வந்துள்ளதை கவனிக்கவில்லை. பஸ் டிரைவர், பஸ்ஸை எடுத்தவுடன் கீழே நின்று கொண்டிருந்த பவனிகாஸ்ரீ மீது பள்ளி பஸ் சக்கரம் ஏறியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் பஸ்ஸை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து வீரகனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று குழந்தையின் உடலை மீட்டு, பிரேத சோதனைக்கு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பொது மக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X