ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற இந்து முன்னணியினர் கைது

Added : ஆக 17, 2022 | |
Advertisement
சென்னை மதுரவாயலில் கடந்த மாதம் நடந்த இந்து முன்னணி உரிமை மீட்டு பிரசார கூட்டத்தில் பேசிய, அந்த அமைப்பின் கலை பண்பாடு பிரிவு செயலாளரும், சினிமா சண்டை பயிற்சியாளருமான கனல் கண்ணன், திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் கோவில் எதிரே, கடவுள் இல்லை என கூறியவரின் சிலை, என்று உடைக்கப்படுகிறதோ, அன்றுதான் ஹிந்துக்களின் எழுச்சி நாள் என கூறினார். இது குறித்த புகார்படி, கனல் கண்ணனை

சென்னை மதுரவாயலில் கடந்த மாதம் நடந்த இந்து முன்னணி உரிமை மீட்டு பிரசார கூட்டத்தில் பேசிய, அந்த அமைப்பின் கலை பண்பாடு பிரிவு செயலாளரும், சினிமா சண்டை பயிற்சியாளருமான கனல் கண்ணன், திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் கோவில் எதிரே, கடவுள் இல்லை என கூறியவரின் சிலை, என்று உடைக்கப்படுகிறதோ, அன்றுதான் ஹிந்துக்களின் எழுச்சி நாள் என கூறினார். இது குறித்த புகார்படி, கனல் கண்ணனை போலீசார் கைது செய்தனர்.
அவர் கைதானதை கண்டித்து, இந்து முன்னணி அமைப்பினர், ஓசூர் ரயில்வே ஸ்டேஷன் முன், நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடத்த, சேலம் கோட்ட பொறுப்பாளர் உமேஷ் தலைமையில் திரண்டனர். இதையடுத்து, ஓசூர் டவுன் போலீசார், உமேஷ் உட்பட மொத்தம், 10 பேரை கைது செய்து, திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் மாலையில்
விடுவித்தனர்.
* இந்து முன்னனி தர்மபுரி மாவட்டச் செயலாளர் சந்தோஷ் தலைமையிலான நிர்வாகிகள், தர்மபுரி டவுன் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்துக்கு கூடினர். இதையறிந்த தர்மபுரி டவுன் போலீசார், அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றதாக, இந்த அமைப்பின் நிர்வாகிகள், 11 பேரை கைது
செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X