பீஹாரில் 35 லோக்சபா தொகுதிகளில் வெற்றி பெற பா.ஜ., இலக்கு

Updated : ஆக 17, 2022 | Added : ஆக 17, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
பாட்னா: 2024ம் ஆண்டு நடக்கும் லோக்சபா தேர்தலில் பீஹாரில் 35 தொகுதிகளில் வெற்றி பெற பா.ஜ., இலக்கு நிர்ணயித்துள்ளது.பீஹாரில் பா.ஜ., உடனான கூட்டணியை முறித்த ஐக்கிய ஜனதா தள தலைவரும், முதல்வருமான நிதிஷ்குமார், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளார்.இதனையடுத்து பா.ஜ., உயர் மட்ட குழு டில்லியில் ஆலோசனை நடத்தியது. பா.ஜ., தலைமை அலுவலகத்தில்
பீஹார் பாஜ, லோக்சபா தேர்தல் 2024, சஞ்சய் ஜெயிஸ்வால், Bihar BJP, Lok Sabha Election 2024, Sanjay Jaiswal,

பாட்னா: 2024ம் ஆண்டு நடக்கும் லோக்சபா தேர்தலில் பீஹாரில் 35 தொகுதிகளில் வெற்றி பெற பா.ஜ., இலக்கு நிர்ணயித்துள்ளது.

பீஹாரில் பா.ஜ., உடனான கூட்டணியை முறித்த ஐக்கிய ஜனதா தள தலைவரும், முதல்வருமான நிதிஷ்குமார், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளார்.

இதனையடுத்து பா.ஜ., உயர் மட்ட குழு டில்லியில் ஆலோசனை நடத்தியது. பா.ஜ., தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில், பா.ஜ., தலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பீஹார் மாநில பாஜ., தலைவர் சஞ்சய் ஜெயிஸ்வால், பிஎல் சந்தோஷ், ரவி சங்கர் பிரசாத், ஷா நவாஸ் ஹூசைன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்திற்கு பின்னர் சஞ்சய் ஜெயிஷ்வால் கூறுகையில், மக்களை ஏமாற்றுதற்காக மகாபந்தன் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இக்கூட்டணியை எதிர்த்து தெருவில் இருந்து சட்டசபை வரை பா.ஜ., போராடும். 2024 லோக்சபா தேர்தலில் பீஹாரில் 35 தொகுதிகளில் வெற்றி பெறுவது என பா.ஜ., இலக்கு நிர்ணயித்துள்ளது. மக்களை ஏமாற்றி பின்புற வாசல் வழியாக இக்கூட்டணி லாலுவை உருவாக்க இக்கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. வரும் லோக்சபா தேர்தலில், பீஹாரில் 35 தொகுதிகளுக்கு மேல் பா.ஜ., வெற்றி பெற்று சாதனை படைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.மொத்தம் 40 தொகுதிகள் கொண்ட பீஹாரில், தற்போது பா.ஜ., சார்பில் 17, ஐக்கிய ஜனதா தளம் சார்பில் 16 , லோக் தந்த்ரிக் கட்சி சார்பில் 6 , காங்கிரஸ் சார்பில் ஒரு எம்.பி., உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பிரபு - மதுரை,இந்தியா
18-ஆக-202203:37:49 IST Report Abuse
பிரபு மக்களை ஏமாற்றி பின்புற வாசல் வழியாக ஆட்சியை அமைப்பது யார் என்று எல்லோருக்கும் தெரிந்திருக்க நீங்களே அந்த வார்த்தையை பயன்படுத்துவது வியப்புக்குரியது.
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
17-ஆக-202215:06:35 IST Report Abuse
பாமரன் மீதி உறுப்பினர்களை விலைக்கு பேசி வாங்கிடுவோம்ல சேட்ஜி...🙄
Rate this:
vadivelu - thenkaasi,இந்தியா
17-ஆக-202217:14:04 IST Report Abuse
vadiveluவிலைக்கு வந்தால் வாங்கத்தான் செய்யணும்.விலைக்கு போக கூடியவர்கள ஏன் கட்சிகள் M L A , MP ஆக்குகிறார்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X