பா.ஜ., பார்லி., குழுவிலிருந்து கட்காரி ‛‛அவுட்'': எடியூரப்பா ‛‛இன்''

Updated : ஆக 17, 2022 | Added : ஆக 17, 2022 | கருத்துகள் (18) | |
Advertisement
புதுடில்லி: பா.ஜ.,வில் முக்கியமான முடிவுகளை எடுக்கும் பார்லிமென்டரி குழு மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, ம.பி., முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.மத்தியில் ஆளும் பா.ஜ.,வில் முக்கிய முடிவுகளை எடுக்கும் குழுவாக பார்லிமென்டரி குழு உள்ளது. அக்கட்சியின் தேசிய தலைவரான நட்டா தலைமையில் செயல்படும் இந்த குழுவில் பிரதமர் மோடி,

புதுடில்லி: பா.ஜ.,வில் முக்கியமான முடிவுகளை எடுக்கும் பார்லிமென்டரி குழு மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, ம.பி., முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

மத்தியில் ஆளும் பா.ஜ.,வில் முக்கிய முடிவுகளை எடுக்கும் குழுவாக பார்லிமென்டரி குழு உள்ளது. அக்கட்சியின் தேசிய தலைவரான நட்டா தலைமையில் செயல்படும் இந்த குழுவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

இக்குழுவில் இடம்பெற்றிருந்த அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் மறைவு காரணமாகவும், வெங்கையா நாயுடு துணை ஜனாதிபதியாக பதவியேற்றதாலும் அந்த இடங்கள் காலியாகின. இதனையடுத்து அந்த இடங்களை நிரப்பியும், குழுவை மறு சீரமைத்த பட்டியலை நட்டா வெளியிட்டுள்ளார்.

குழுவில் இருந்து மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.



latest tamil news




பா.ஜ., ஆளும் மாநில முதல்வர்கள் மற்றும் மாநில தலைவர்கள் இடம்பெற்றுள்ள இக்குழுவில் இருந்து, அக்கட்சியின் முன்னாள் தலைவராக இருந்த கட்காரி நீக்கப்பட்டது பலருக்கும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது. இதற்கு முன்னர், முன்னாள் தலைவர்கள் யாரும் பார்லி குழுவில் இருந்து நீக்கப்பட்டது கிடையாது. தற்போது சாலை போக்குவரத்து அமைச்சராக இருக்கும் கட்காரி, மத்திய தேர்தல் குழுவில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.


latest tamil news


அவர்களுக்கு பதில், கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, மத்திய அமைச்சர் சர்பானந்த சோனவல், கே. லக்ஷ்மண் ஆகியோர் சேர்க்கப்பட்டு உள்ளனர்.


சர்பானந்த் சோனவல்

புதிதாக சேர்க்கப்பட்டுள்ள சர்பானந்தா சோனவல், தற்போது ஆயுஷ் அமைச்சராக பதவி வகித்து வருகிறார். அசாம் மாநில முன்னாள் முதல்வராக பதவி வகித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்த அசாம் சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றதை தொடர்ந்து அக்கட்சியின் ஹிமாண்டா பிஸ்வா சர்மா முதல்வராக பதவியேற்றார். இதனையடுத்து சர்பானந்தா சோனவால் மத்திய அமைச்சராக்கப்பட்டுள்ளார்.


எடியூரப்பா

பார்லி குழுவில் சேர்க்கப்பட்டுள்ள எடியூரப்பா, கர்நாடகா முதல்வராக பதவி வகித்துள்ளார். கடந்த ஆண்டு அவர் பதவி விலகினார். அவருக்கு பதில் பசவராஜ் பொம்மை பதவியேற்றார். லிங்காயத் சமுதாயத்தில் மிக முக்கிய தலைவராக இருக்கும் எடியூரப்பா முதல்வர் பதவியில் இருந்து விலகிய போது, கட்சியில் முக்கிய பதவி வழங்கப்படும் என உறுதி மொழி அளிக்கப்பட்டிருந்தது.


ஓபிசி பிரிவு தலைவர்



பார்லி குழுவில் சேர்க்கப்பட்ட லக்ஷ்மணன், தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர். தற்போது ஓபிசி பிரிவு தலைவராக உள்ளார். உ.பி.,யில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.,விற்கு பலன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுதா யாதவ், சத்யநாராயண் ஜாடியா, லால் சிங் ராஜ்புரா ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.



தேர்தல் குழுவிலும் மாற்றம்


பா.ஜ.,வின் மத்திய தேர்தல் குழுவிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இக்குழுவில் இருந்தும் நிதின் கட்காரி, சிவராஜ் சிங் சவுகான், ஷா நவாஸ் ஹூசைன், ஜூவல் ஓரம் ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர். மஹா., முன்னாள் முதல்வர் பட்னாவிஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Duruvesan - Dharmapuri,இந்தியா
17-ஆக-202219:54:58 IST Report Abuse
Duruvesan மூர்கன் கதறல், yeddy is back, இனி மூர்க்க கூட்டம் வெறி கொண்டு அலையும், காங்கிரஸ் மற்றும் pfi கு சங்கு தான்
Rate this:
Cancel
அன்பு - தஞ்சை,கனடா
17-ஆக-202218:54:26 IST Report Abuse
அன்பு ////.
Rate this:
Cancel
17-ஆக-202217:36:56 IST Report Abuse
அப்புசாமி வெங்காயத்துக்கும் ஒரு வழி பிறக்கணும். பிறக்கும்.
Rate this:
17-ஆக-202219:33:05 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம்////...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X