பட்டப்பகலில் கார் கதவை உடைத்து ரூ.20 லட்சம் கொள்ளை

Added : ஆக 17, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
நாமக்கல்: பரமத்தி வேலுாரில் பட்டப்பகலில், கார் கதவை உடைத்து, 20 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்து சென்ற, மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார் சுல்தான்பேட்டையை சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் அதிபர் பாலசுப்ரமணி, 49. இவர், இன்று (ஆக.,17) பகல், 1:30 மணிக்கு, அப்பகுதியில் உள்ள வங்கி ஒன்றில், தனது கணக்கில் இருந்து, 8 லட்சம் ரூபாய்
பட்ட பகல்,திருட்டு,

நாமக்கல்: பரமத்தி வேலுாரில் பட்டப்பகலில், கார் கதவை உடைத்து, 20 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்து சென்ற, மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார் சுல்தான்பேட்டையை சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் அதிபர் பாலசுப்ரமணி, 49. இவர், இன்று (ஆக.,17) பகல், 1:30 மணிக்கு, அப்பகுதியில் உள்ள வங்கி ஒன்றில், தனது கணக்கில் இருந்து, 8 லட்சம் ரூபாய் எடுத்துள்ளார். தொடர்ந்து, நிதி நிறுவனத்துக்கு சென்ற அவர், அங்கு, சீட்டுப்பணம், 12 லட்சம் ரூபாய் எடுத்துள்ளார். மொத்தமாக, 20 லட்சம் ரூபாயை, தனது காரில் வைத்துக் கொண்டு, வீட்டுக்கு வந்துள்ளார்.அப்போது, தனது மகன் ஹரிஹரன், 25 என்பவரை, பணத்தை எடுத்துக்கொண்டு, வண்டியை லாக் செய்துவிட்டு வரும்படி தெரிவித்தவர், வீட்டுக்குள் சென்றுவிட்டார்.
ஆனால், அவரது மகன் ஹரிஹரன், காரை லாக் செய்துவிட்டு உள்ளே சென்றுள்ளார். அவர்களை பின் தொடர்ந்து, இரண்டு பைக்கிள், ஹல்மெட் அணிந்துகொண்டு வந்த மூன்று மர்ம நபர்கள், கார் கதவை உடைத்து, உள்ளே இருந்த, 20 லட்சம் ரூபாயை கொள்ளை அடித்து சென்றனர். பகல், 2:00 மணிக்கு வெளியே வந்த பார்த்த போது, கார் கதவு திறந்துகிடைப்பதை கண்ட பாலசுப்ரமணி அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தில் விசாரித்ததில், மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
தகவல் அறிந்த பரமத்தி வேலுார் போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து தீவிர விசாரணை நடத்தினர். இது தொடர்பாக வழக்கு பதிந்த போலீசார், பக்கத்து வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை வைத்து தீவிர விசாரணை நடத்துகின்றனர். சிசிடிவி கேமராவில் பதிவான பைக்கிள், உள்ளூர் சீரியல் எண் உள்ளதால், கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்கள், அப்பகுதியை சேர்ந்தவர்களாக இருப்பார்களா என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.

பட்டப்பகலில், கார் கதவை உடைத்து, 20 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்து சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jagan - Chennai,இலங்கை
17-ஆக-202220:48:56 IST Report Abuse
jagan சுல்தான் பேட்டை - வேற எப்பிடி இருக்கும்
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
17-ஆக-202220:25:46 IST Report Abuse
Girija ஹரி யை உதைத்தால் பணம் வெளிவரும் . 20 லட்சம் என்ன மிக பெரிய பாரமா, உடனே எடுத்து செல்ல முடியாமல் இருந்ததற்கு ?
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
17-ஆக-202217:37:56 IST Report Abuse
raja விடியல் ஆட்சியில் நேற்று வாங்கி கொள்ளை இன்று பட்ட பகலில் காரை உடைத்து கொள்ளை ... நம்ப நம்பர் ஒன்னு பிரின்சிபால் சட்டம் ஒழுங்கு சூப்பெரா இருக்குன்னு பெருமை போங்க சொல்லுவாரு....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X