பீஹார் சட்ட அமைச்சருக்கு எதிராக வாரண்ட்: தெரியாது என்கிறார் நிதிஷ்| Dinamalar

பீஹார் சட்ட அமைச்சருக்கு எதிராக வாரண்ட்: தெரியாது என்கிறார் நிதிஷ்

Updated : ஆக 17, 2022 | Added : ஆக 17, 2022 | கருத்துகள் (9) | |
பாட்னா: பீஹார் சட்ட அமைச்சராக பதவியேற்ற கார்த்திகேயா சிங் கடத்தல் வழக்கில் கைதாகும் சூழ்நிலை உள்ளதாகவும், அதற்காக வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து முதல்வர் நிதிஷ்குமாரிடம் நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, அது குறித்து தனக்கு தெரியாது என பதிலளித்துள்ளார்.பீஹாரில், ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் நிதிஷ்குமார், ராஷ்ட்ரீய ஜனதா தளம்
Bihar, Law Minister, Arrest, Nitish Kumar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பாட்னா: பீஹார் சட்ட அமைச்சராக பதவியேற்ற கார்த்திகேயா சிங் கடத்தல் வழக்கில் கைதாகும் சூழ்நிலை உள்ளதாகவும், அதற்காக வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து முதல்வர் நிதிஷ்குமாரிடம் நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, அது குறித்து தனக்கு தெரியாது என பதிலளித்துள்ளார்.



பீஹாரில், ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் நிதிஷ்குமார், ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளார். அம்மாநில சட்டத்துறை அமைச்சராக ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் கார்த்திகேயா சிங் பதவியேற்றார்.



கடந்த 2014ம் ஆண்டு, பில்டர் ஒருவரை கடத்தி கொலை செய்ய முயன்றதாக, கார்த்திகேயா சிங் உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவர் மீது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் கடந்த ஆக.,16 ம் தேதி நீதிமன்றத்தில் சரணடைந்தார். அப்போது நீதிபதி, கார்த்திகேயா சிங்கை வரும் செப்.,1 வரை கைது செய்ய தை விதித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்தார். இதன் பின்னர் அதே நாளில் கார்த்திகேயா சிங், சட்டத்துறை அமைச்சராக பதவியேற்று கொண்டார்.


இது தொடர்பாக கருத்து தெரிவித்த பா.ஜ., மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத், பாட்னா உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தைரியமான நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கிறோம். கார்த்திகேய சிங் பதவி நீக்கம் செய்யப்படுவதுடன் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.



latest tamil news


இது குறித்து முதல்வர் நிதிஷ்குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது பற்றி தனக்கு தெரியாது. அது குறித்த தகவல் இல்லை எனக்கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X