38 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன ஜவான் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

Updated : ஆக 17, 2022 | Added : ஆக 17, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
சியா்ச்சின்: சியாச்சின் பனிமலைப்பகுதியில் 38 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன ஜவான் உடல் மீட்கப்பட்டு , இன்று அவரது செந்த மாநிலத்திற்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக கொண்டு வரப்பட்டது. உலகின் மிகவும் உயரமான போர்க்களமான சியாச்சின் மலைப்பகுதியில் கடந்த ஞாயிறன்று ஜவான்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஜவானின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவர் குறித்த
  காணாமல் போன ஜவான் உடல்  உறவினர்கள்,  ஒப்படைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சியா்ச்சின்: சியாச்சின் பனிமலைப்பகுதியில் 38 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன ஜவான் உடல் மீட்கப்பட்டு , இன்று அவரது செந்த மாநிலத்திற்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக கொண்டு வரப்பட்டது.
உலகின் மிகவும் உயரமான போர்க்களமான சியாச்சின் மலைப்பகுதியில் கடந்த ஞாயிறன்று ஜவான்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஜவானின் உடல் கண்டெடுக்கப்பட்டது.


latest tamil news



அவர் குறித்த விசாரணையில், கடந்த 1984-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக 'ஆபரேசன் மெகதூத் ' என்ற பெயரில் குமாவோன் ரிஜிமெண்ட் படைப்பிரிவை சேர்ந்த 20 பேர் கொண்ட ஜவான்கள் சியாச்சின் பகுதியில் முகாமிட்டிருந்தனர். அப்போது இவர்கள் விபத்தில் சிக்கினர். 15 ஜவான்கள் உடல் மீட்கப்பட்ட நிலையில் ஒருவர் மட்டும் காணாமல் போனதும், அவர் தான் தற்போது மீட்கப்பட்ட உத்தர்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஜவான் சந்திரசேகர ஹர்போலா என்பதும் தெரியவந்தது.


latest tamil news





அவரது உடல் சொந்த மாநிலமான உத்தர்கண்ட் , ஹால்ட்வாணி பகுதிக்கு கொண்டு வரப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு முதல்வர் புஷ்கர்சிங் தாமி , மற்றும் ராணுவ உயரதிகாரிகள் மலரஞ்சலி செலுத்தினர். ராணுவ மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெறும் என கூறப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சாண்டில்யன் - Paris,பிரான்ஸ்
17-ஆக-202219:41:14 IST Report Abuse
சாண்டில்யன் முன்னதாக அவரது உடலுக்கு முதல்வர் புஷ்கர்சிங் தாமி , மற்றும் ராணுவ உயரதிகாரிகள் மலரஞ்சலி செலுத்தினர்..
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
17-ஆக-202219:12:37 IST Report Abuse
Ramesh Sargam இந்த செய்தியை படித்தவுடன் என் நெஞ்சம் மிகவும் வேதனைப்பட்டது. 38 ஆண்டுகளாக அந்த வீரனின் உடல் பனியில் புதையுண்டு இருந்திருக்கிறது. அவர் உடல் கிடைக்காமல் அவர் உறவினர்கள் என்ன கஷ்டப்பட்டார்களோ.. இறைவா,, ஏன் இந்த கொடுமை நம் மண்ணை காக்கும் வீரர்களுக்கு...?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X