கூடுதல் பஸ்கள் இல்லாததால்மாணவர்கள் கடும் அவதி

Added : ஆக 17, 2022 | |
Advertisement
மணவாள நகர்:மணவாள நகர் பகுதி யில், கூடுதல் மாநகர பேருந்துகள் இல்லாததால் மாணவ - மாணவியர் கடும் அவதிப்பட்டுவருகின்றனர்.கடம்பத்துார் ஒன்றியம், வெங்கத்துார் ஊராட்சிக்குட்பட்ட மணவாள நகர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மணவாள நகர், அரண்வாயல், வெங்கத்துார், அரண்வாயல்குப்பம், புதுச்சத்திரம், ஜமீன்கொரட்டூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் ஐநுாறுக்கும் மேற்பட்ட
கூடுதல் பஸ்கள் இல்லாததால்மாணவர்கள் கடும் அவதி

மணவாள நகர்:மணவாள நகர் பகுதி யில், கூடுதல் மாநகர பேருந்துகள் இல்லாததால் மாணவ - மாணவியர் கடும் அவதிப்பட்டுவருகின்றனர்.

கடம்பத்துார் ஒன்றியம், வெங்கத்துார் ஊராட்சிக்குட்பட்ட மணவாள நகர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மணவாள நகர், அரண்வாயல், வெங்கத்துார், அரண்வாயல்குப்பம், புதுச்சத்திரம், ஜமீன்கொரட்டூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் ஐநுாறுக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்துவருகின்றனர்.

இந்த மாணவர்கள் பூந்தமல்லி - திருவள்ளூர் செல்லும் தடம் எண். '597ஏ' என்ற மாநகர பேருந்தை பயன்படுத்தி சென்றுவருகின்றனர்.காலை, மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இல்லாததால் மாணவர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.சில நேரங்களில் விபத்து மற்றும் அசம்பாவிதமான சம்பவங்களால் மாணவ - மாணவியர் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர். கூடுதலாக அரசு பேருந்துகள் இயக்க வேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

சில தினங்களுக்கு முன், பள்ளி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தாக்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் பலியானார். இதையடுத்து, மாணவியின் தந்தை உட்பட மூவரை மணவாள நகர் போலீசார் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.எனவே மாவட்ட நிர்வாகம் கூடுதல் அரசு பேருந்துகளை இயக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவ - மாணவியர் எதிர்பார்க்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X