உடல் நலம் பாதிக்கப்பட்ட யானை: வனத்துறை கண்காணிப்பு

Added : ஆக 17, 2022 | |
Advertisement
பெ.நா.பாளையம்:தமிழக, கேரள எல்லையான ஆனைகட்டி கொடுங்கரை பள்ளத்தில், உடல் நலம் பாதித்த ஒற்றை ஆண் யானையின் நடமாட்டத்தை, இரு மாநில வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.தமிழக, கேரளா எல்லையான, கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்டது ஆனைகட்டி.இங்குள்ள பட்டிசாலை பகுதியில், இரு மாநிலங்களை பிரிக்கும் கொடுங்கரை பள்ளத்தின் நடுவே, சோர்வுடன், எட்டு வயது
உடல் நலம் பாதிக்கப்பட்ட யானை: வனத்துறை கண்காணிப்பு

பெ.நா.பாளையம்:தமிழக, கேரள எல்லையான ஆனைகட்டி கொடுங்கரை பள்ளத்தில், உடல் நலம் பாதித்த ஒற்றை ஆண் யானையின் நடமாட்டத்தை, இரு மாநில வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

தமிழக, கேரளா எல்லையான, கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்டது ஆனைகட்டி.இங்குள்ள பட்டிசாலை பகுதியில், இரு மாநிலங்களை பிரிக்கும் கொடுங்கரை பள்ளத்தின் நடுவே, சோர்வுடன், எட்டு வயது மதிக்கத்தக்க ஆண் யானை, இரு நாட்களாக நடமாடி வருகிறது. யார் சிகிச்சை அளிப்பது என, இரு மாநில வனத்துறையினர் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக, வனவிலங்கு ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து, கோவை மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் கூறியதாவது: கோவை வனக் கோட்ட பகுதியில் யானை தென்படவில்லை. இருப்பினும், உடல் நலம் பாதித்த யானைக்கு, கொய்யா, பலா, தென்னங்கீற்று ஆகியவை உணவாக வழங்கப்பட்டன.

விட்டுறாதீங்க பா...



கோவை வனக்கால்நடை அலுவலரிடம் விபரம் தெரிவித்து ஆலோசனை மேற்கொள்ளப் பட்டது. நேற்று அதிகாலை, 2:00 மணி அளவில் கேரளா, புதுார்சுற்றுக்கு உட்பட்ட தாசனுார் மேடு பகுதிக்கு யானை சென்றது. இது, கேரளாவில் உள்ள அட்டப்பாடி வனச்சரகத்தின் கீழ் உள்ளது.

இரு மாநில வனத்துறையினரால், யானை கண்காணிக்கப்பட்டு வருகிறது. வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குனர் ஆலோசனைப்படி, ஆனைமலை மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பக கால்நடை மருத்துவரை வரவழைக்கவும், பொள்ளாச்சியில் இருந்து இரண்டு 'கும்கி'கள் உதவியுடன், யானைக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X