பாண்டூர் கிராமத்தில் வயல்விழா

Added : ஆக 17, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
மயிலாடுதுறை:பாண்டூர் கிராமத்தில் வயல்விழாவை முன்னிட்டு தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் சார்பில் குறுகிய கால ரகமான ஏ எஸ் டி 16 நெல் ரகத்திற்கு மாற்றாக ஏடி 17152 ரகம் விவசாயிகளிடையே அறிமுகம் செய்யப்பட்டு பரவலாக்கல் முயற்சியாக வயல்வெளி ஆய்வு திடல் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நெல் ஆராய்ச்சி நிலையத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள் காட்சிப் படுத்தப்பட்டிருந்தது.மயிலாடுதுறை
 பாண்டூர் கிராமத்தில் வயல்விழா

மயிலாடுதுறை:பாண்டூர் கிராமத்தில் வயல்விழாவை முன்னிட்டு தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் சார்பில் குறுகிய கால ரகமான ஏ எஸ் டி 16 நெல் ரகத்திற்கு மாற்றாக ஏடி 17152 ரகம் விவசாயிகளிடையே அறிமுகம் செய்யப்பட்டு பரவலாக்கல் முயற்சியாக வயல்வெளி ஆய்வு திடல் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நெல் ஆராய்ச்சி நிலையத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள் காட்சிப் படுத்தப்பட்டிருந்தது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே பாண்டூர் கிராமத்தில் தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வயல் தின விழா நடைபெற்றது. நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் டாக்டர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற விழாவில் ஒரு ஹெட்டேருக்கு ஐந்து டன் விளைச்சலைத் தரும் குறுகிய கால ரகமான ஏ எஸ் டி 16 வகை நெல் ரகத்திற்கு மாற்றாக ஏழு டன் வரை விளைச்சலைத் தரக்கூடிய ஏடி 17152 ரகம் விவசாயிகளிடையே அறிமுகப்படுத்தப்பட்டது.

இதனை பரவலாக்கும் முயற்சியாக ராதாகிருஷ்ணன் என்பவருடைய ஒரு ஏக்கர் வயலில் ஆய்வுத்திடல் அமைத்து இரண்டு ரக நெல்லும் ஒரே நேரத்தில் விதைக்கப்பட்டு பயிர்கள் வளர்த்துள்ளது. இதனை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நெல்லை பராமரிக்கும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

இதில் நெல் ஜெயராமனின் பாரம்பரிய நெல் ரகமான கிச்சடி சம்பா மாப்பிள்ளை சம்பா உள்ளிட்ட பல்வேறு வகை நெல் ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியாக வேளாண்துறை மூலம் மானிய விலையில் தயார் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும், இயற்கை உரங்களை தயாரிப்பதற்கு அரசு சார்பில் ஒரு லட்சம் வரை மானியம் வழங்கப்படுவதாகவும் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சேகர் தெரிவித்தார்.

மேலும் ஏடி 1752 ரக நெல் குறித்து வீரசோழன் உழவன் உற்பத்தியாளர் நிறுவன இயக்குனர் முனைவர் நடராஜன் கலந்துகொண்டு இயற்கை வேளாண்மை முறை குறித்து விளக்கம் அளித்தார். நிகழ்ச்சியில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan - Thanjavur ,இந்தியா
18-ஆக-202203:27:01 IST Report Abuse
Mohan பயிர் வளர வைக்கிறத அப்புறம் பாக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X