வடகிழக்கில் மீண்டும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம்:

Updated : ஆக 17, 2022 | Added : ஆக 17, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
கவுகாத்தி: வடகிழக்கு பகுதிகளில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மாணவர் அமைப்பினர் மீண்டும் போராட்டத்தை துவக்கியுள்ளனர். இன்று அசாம் மற்றும் அதன் அண்டை மாநிலத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் தலைதூக்கியுள்ளது.பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் சிறுபான்மையினராக இருந்து, மத ரீதியில் பாதிக்கப்பட்டு, இந்தியாவுக்கு
 Protests Against CAA Start After 2-Year Gap In Northeast

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கவுகாத்தி: வடகிழக்கு பகுதிகளில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மாணவர் அமைப்பினர் மீண்டும் போராட்டத்தை துவக்கியுள்ளனர். இன்று அசாம் மற்றும் அதன் அண்டை மாநிலத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் தலைதூக்கியுள்ளது.

பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் சிறுபான்மையினராக இருந்து, மத ரீதியில் பாதிக்கப்பட்டு, இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ள ஹிந்து, சீக்கிய, கிறிஸ்துவ, ஜைன, புத்த மற்றும் பார்சி இன மக்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில், குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா, பார்லி.,யின் இரு சபைகளிலும் நிறைவேறியது. அப்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், 2019-ல் ஒப்புதல் அளித்தார்.


latest tamil news



இந்த சட்டத்துக்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பல மாநிலங்களில், போராட்டங்கள் தொடர்ந்து நடந்தன.பின்னர் நாட்டில் பரவிய கோவிட் தொற்று காரணமாக போராட்டம் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், அசாமின் பல்வேறு பகுதிகளில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அம்மாநில மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஏற்கனவே வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் அமலில் உள்ள நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பின் ஏ.ஏ.எஸ்.யு. எனப்படும் அனைத்து அசாம் மாணவர் ஒன்றியம் என்ற அமைப்பினர் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டத்தை துவக்கியுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
18-ஆக-202203:49:52 IST Report Abuse
NicoleThomson காங்கிரஸ் மீண்டும் மீண்டும் தன தலையில் தானே மண்ணை அல்லி போட்டுக்கொள்வது என்பது இதைத்தானே ? இப்படி செய்வதால் நடுநிலையோடு உள்ள மக்களும் பிஜேபி க்கு ஆதரவா வோட்டு போட போறாங்க
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
18-ஆக-202200:25:30 IST Report Abuse
Aarkay அந்நிய கைக்கூலிகள் மீண்டும் வேலையை துவங்கிவிட்டனரா? இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும். இவர்களுக்கு எங்கிருந்து funds வருகிறதென கண்டுபிடித்து source-ஐ முடக்கவேண்டும்.
Rate this:
Cancel
Rajamani K - Chennai,இந்தியா
17-ஆக-202220:48:02 IST Report Abuse
Rajamani K அத்தனை போரையும் பிடிச்சு உள்ளே போடுங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X