தேசிய நெடுஞ்சாலையில் சிறுபால பணி 'விறுவிறு'

Added : ஆக 17, 2022 | |
Advertisement
மாமல்லபுரம்:மாமல்லபுரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக, சிறுபால பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன.தமிழக அரசின், சென்னை - புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை, 20 ஆண்டுகளுக்கு முன் மேம்படுத்தப்பட்டது.இத்தடத்தில், மாமல்லபுரம் - புதுச்சேரி பகுதியை, தேசிய நெடுஞ்சாலை 332ஏ என, 2018ல், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்தது.தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம்,
தேசிய நெடுஞ்சாலையில் சிறுபால பணி 'விறுவிறு'

மாமல்லபுரம்:மாமல்லபுரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக, சிறுபால பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன.

தமிழக அரசின், சென்னை - புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை, 20 ஆண்டுகளுக்கு முன் மேம்படுத்தப்பட்டது.இத்தடத்தில், மாமல்லபுரம் - புதுச்சேரி பகுதியை, தேசிய நெடுஞ்சாலை 332ஏ என, 2018ல், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்தது.

தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், முதலில், மாம்லபுரம் - முகையூர் இடையே, 31 கி.மீ.க்கு, 675 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்துகிறது.தனியார் ஒப்பந்த நிறுவனம், மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி பகுதியில், ஜூன் 1ல் பணிகளை துவக்கியது.பழைய சாலையை ஒட்டி, விரிவாக்கப்பட உள்ள சாலைக்காக, சிறிய பாலங்களை விறுவிறுப்பாக கட்டுகிறது.

இப்பாலங்கள் கட்டப்பட்டதும், புதிய பால பகுதியில், மாற்று தடம் அமைத்து, பழைய சாலையின் பாலங்களை இடித்து, புதிதாக கட்டப்பட உள்ளது.இதனால் பால கட்டுமான பகுதிகளில், வாகனங்கள் குறைவான வேகத்தில் கடக்க, ஒப்பந்த நிறுவனம், எச்சரிக்கை பலகை வைத்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X