ரூ.6,000 கோடி மோசடி: முக்கிய புள்ளிகள் எங்கே?

Added : ஆக 17, 2022 | |
Advertisement
சென்னை:சென்னையை தலைமை இடமாக வைத்து, பல்வேறு நகரங்களில், எல்.என்.எஸ்., என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. அதன் இயக்குனர்களான வேலுாரைச் சேர்ந்த லட்சுமி நாராயணன் சுந்தரம், 45, சுந்தரம் வேதநாரயணன், 42, சுந்தரம் பக்தவச்சலம், 42, சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கஜேந்திரன், 45, ஈரோடு மாவட்டம் மூலப்பாளையத்தைச் சேர்ந்த விவேக், 45, ஆகியோர் இருந்து வருகின்றனர்.அதிக வட்டி தருவதாக, ஒரு
ரூ.6,000 கோடி மோசடி: முக்கிய புள்ளிகள் எங்கே?

சென்னை:சென்னையை தலைமை இடமாக வைத்து, பல்வேறு நகரங்களில், எல்.என்.எஸ்., என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது.
அதன் இயக்குனர்களான வேலுாரைச் சேர்ந்த லட்சுமி நாராயணன் சுந்தரம், 45, சுந்தரம் வேதநாரயணன், 42, சுந்தரம் பக்தவச்சலம், 42, சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கஜேந்திரன், 45, ஈரோடு மாவட்டம் மூலப்பாளையத்தைச் சேர்ந்த விவேக், 45, ஆகியோர் இருந்து வருகின்றனர்.அதிக வட்டி தருவதாக, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோரிடம், 6,000 கோடி ரூபாய் மோசடி செய்து தலைமறைவாக உள்ளனர்.
மோசடி குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த மோசடி தொடர்பாக, சென்னையைச் சேர்ந்த குப்புராஜ், 40, ராணிப்பேட்டையைச் சேர்ந்த ஜெகநாதன், 34, ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், முக்கிய குற்றவாளிகளான லட்சுமி நாராயணன் சுந்தரம் உள்ளிட்டோர் தலைமறைவாக உள்ளனர். இவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது. இவர்களை, ஐந்து தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X