மின் திட்டங்களை விரைவுபடுத்த 234 தொகுதிகளுக்கு சிறப்பு அதிகாரிகள்

Added : ஆக 17, 2022 | |
Advertisement
சென்னை:'ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று வித்தியாசம் பார்க்காமல், அனைத்து எம்.எல்.ஏ.,க்களையும் அழைத்து, தொகுதியில் முடிந்துள்ள மின் வினியோக பணிகளை இயக்கத்திற்கு கொண்டு வர வேண்டும்,'' என, சிறப்பு அதிகாரிகளுக்கு, மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:தமிழகம் முழுதும் நடக்கும் மின் வாரிய பணிகளை விரைவுபடுத்தவும், புகார்களுக்கு விரைந்து

சென்னை:'ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று வித்தியாசம் பார்க்காமல், அனைத்து எம்.எல்.ஏ.,க்களையும் அழைத்து, தொகுதியில் முடிந்துள்ள மின் வினியோக பணிகளை இயக்கத்திற்கு கொண்டு வர வேண்டும்,'' என, சிறப்பு அதிகாரிகளுக்கு, மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:தமிழகம் முழுதும் நடக்கும் மின் வாரிய பணிகளை விரைவுபடுத்தவும், புகார்களுக்கு விரைந்து தீர்வு காணவும், 234 தொகுதிகளுக்கும் செயற்பொறியாளர், மேற்பார்வை பொறியாளர், தலைமை பொறியாளர்களை உள்ளடக்கிய, சிறப்பு அதிகாரிகள்நியமிக்கப்பட்டுள்ளனர்.அவர்கள், துணை மின் நிலையங்கள், மின் சாதனங்களை நேரில் சென்று ஆய்வு செய்வர்.
தொகுதி மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் தேவை என்ன என்பதைக் கேட்டு, ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்வர்.இந்த ஆண்டு, 2,300 கோடி ரூபாய் செலவில், மின் திட்ட பணிகள் செயல்படுத்தப்பட உள்ளன. சிறப்பு அதிகாரிகள், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று வித்தியாசம் பார்க்காமல், அனைத்து எம்.எல்.ஏ.,க்களையும் அழைத்து, தொகுதியில் முடிந்துள்ள மின் வினியோக பணிகளை இயக்கத்திற்கு கொண்டு வர வேண்டும்.
எம்.எல்.ஏ.,க்களிடம், மின் துறையில் என்ன தேவை உள்ளது என்பதை கேட்டறிந்து, அதை செயல்படுத்த வேண்டும்.'டாஸ்மாக்' மது கடைகளில், பாருக்கான 'டெண்டர்' நடக்கிறது. அதில் பங்கேற்க, 1,278 பேர் நேரில் விண்ணப்பங்களை வாங்கிஉள்ளனர்.மேலும், 11 ஆயிரத்து, 879 பேர் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
பார் 'டெண்டர்' வெளிப்படையாக நடக்கிறது.யார் அதிக விலை கேட்கின்றனரோ, அவர்களுக்கு பார் உரிமம் வழங்கப்படும். சில தனி நபர்கள், பார் விவகாரம் தொடர்பாக, தாங்களே பேசி, அதிகாரி மற்றும் நிர்வாகம் தரப்பில் பேசுவது போல், சமூக வலைதளங்களில் வெளியிடுகின்றனர். இது தொடர்பாக, டாஸ்மாக் சார்பில் புகார் அளிக்கப்படும். ஓராண்டில், 45 மதுக் கடைகள் மூடப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X