மத்திய அமைச்சருக்கு அன்புமணி கடிதம்

Added : ஆக 18, 2022 | |
Advertisement
சென்னை:'தேசிய சட்ட பல்கலையின், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், ஓ.பி.சி., இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த வேண்டும்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக, மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூவுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதம்: தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள, 23 தேசிய சட்டப் பல்கலைகளில், குறிப்பிட்ட சதவீத இடங்கள், அகில இந்திய தொகுப்புக்கு

சென்னை:'தேசிய சட்ட பல்கலையின், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், ஓ.பி.சி., இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த வேண்டும்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூவுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதம்: தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள, 23 தேசிய சட்டப் பல்கலைகளில், குறிப்பிட்ட சதவீத இடங்கள், அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள இடங்கள், அந்தந்த மாநில மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

மேலும், 23 தேசிய சட்ட பல்கலைகளில் ஒன்பதில் மட்டும் தான், 27 சதவீதத்தை விட கூடுதலாகவோ, குறைவாகவோ, ஓ.பி.சி., எனும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்தியாவில் மிக அதிகமாக, திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலையில் தான், அகில இந்திய தொகுப்பில் 50 சதவீத இடங்கள், ஓ.பி.சி.,க்கு ஒதுக்கப்படுகின்றன.

ஐந்து பல்கலைகளில், 27 சதவீதத்திற்கும் குறைவாக, ஓ.பி.சி., இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மீதமுள்ள 14 தேசிய சட்டப் பல்கலைகளிலும் ஓ.பி.சி., இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. இந்த சமூக அநீதி போக்கப்பட வேண்டும். தேசிய சட்ட பல்கலைகளில், ஓ.பி.சி., இட ஒதுக்கீட்டை செயல்படுத்தும்படி, பல்கலை மானியக் குழுவும், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் பலமுறை அறிவுறுத்தியுள்ளன.

ஆனாலும், தேசிய சட்டப் பல்கலைகள் செயல்படுத்தவில்லை என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.எனவே, இந்த விவகாரத்தில் தாங்கள் தலையிட்டு, அனைத்து தேசிய சட்ட பல்கலைகளிலும், ஓ.பி.சி., பிரிவினருக்கு 27 சதவீதம் அல்லது அதற்கும் கூடுதலான இட ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X