3 கோஷ்டிகள்; 3 பட்டியல்! தமிழக காங்கிரசில் 'லகலக...'

Added : ஆக 18, 2022 | |
Advertisement
தமிழக காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர்களை நியமிக்க, மூன்று தரப்பிலிருந்து பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதால், எதற்கு ஒப்புதல் அளிப்பது என்பது தெரியாமல், டில்லி மேலிடம் குழப்பத்தில் உள்ளது.காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது:தமிழக காங்., கட்சியில், அமைப்பு ரீதியாக புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய, உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டது. மாவட்ட வாரியாக பொதுக்குழு

தமிழக காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர்களை நியமிக்க, மூன்று தரப்பிலிருந்து பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதால், எதற்கு ஒப்புதல் அளிப்பது என்பது தெரியாமல், டில்லி மேலிடம் குழப்பத்தில் உள்ளது.
காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது:தமிழக காங்., கட்சியில், அமைப்பு ரீதியாக புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய, உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டது. மாவட்ட வாரியாக பொதுக்குழு உறுப்பினர்கள், 684 பேரை தேர்வு செய்ய வேண்டும்.
கோஷ்டி தலைவர்களின் ஆதரவு மாவட்ட தலைவர்களிடம் பரிந்துரைகளை பெற்று, பொதுக் குழு உறுப்பினர்கள் பட்டியல் தயாரித்து, தேர்தல் உதவி அதிகாரி நெய்யாற்றின்கரை சனலிடம், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி வழங்கி உள்ளார்.
தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ஸ்ரீவெல்லபிரசாத்தும், தமிழக காங்கிரஸ் முன்னணி தலைவர் ஒருவரும் இணைந்து, மற்றொரு பட்டியலை தயாரித்து அனுப்பி வைத்துள்ளனர். தேர்தல் உதவி அதிகாரி நெய்யாற்றின்கரை சனல் தரப்பில், இன்னொரு பட்டியலும் தயாரிக்கப்பட்டுள்ளது.
மூன்று விதமான பட்டியல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால், எந்த பட்டியலுக்கு ஒப்புதல் அளிப்பது என, காங்கிரஸ் தேர்தல் அதிகாரி மதுசூதன் மிஸ்திரிக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. அழகிரிக்கு முன்பாக, தலைவர் பதவி வகித்த திருநாவுக்கரசர் காலத்தில் அறிவிக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் பட்டியலையே இப்போதும் வெளியிட்டு, கோஷ்டி பூசல் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாமா என, டில்லி மேலிடம் ஆலோசித்து வருகிறது.இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் -


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X