இது பின்னடைவு அல்லகே.பி.முனுசாமி விளக்கம்

Added : ஆக 18, 2022 | |
Advertisement
''அ.தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர்கள், முழுமையாக பழனிசாமியை ஏற்றுக் கொண்டுள்ளனர்,'' என, பழனிசாமி ஆதரவாளரான, முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:நடந்து முடிந்த பொதுக்குழுவில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றினர். அவர்கள் 100 பொதுக்குழு உறுப்பினர்களை வைத்துக் கொண்டு, நீதிமன்றம் செல்கின்றனர். இதில் பின்னடைவு என்ற கேள்வி

''அ.தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர்கள், முழுமையாக பழனிசாமியை ஏற்றுக் கொண்டுள்ளனர்,'' என, பழனிசாமி ஆதரவாளரான, முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி:நடந்து முடிந்த பொதுக்குழுவில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றினர். அவர்கள் 100 பொதுக்குழு உறுப்பினர்களை வைத்துக் கொண்டு, நீதிமன்றம் செல்கின்றனர். இதில் பின்னடைவு என்ற கேள்வி எழவில்லை.
மொத்தம் உள்ள, 2,600 பொதுக்குழு உறுப்பினர்களில், 2,562 பேர் பழனிசாமியை தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளனர். பொதுக்குழு உறுப்பினர், கீழ்மட்ட கட்சி உறுப்பினர்கள் வழியாக தேர்வு செய்யப்படுகின்றனர்.அவர்கள் தான் கட்சியின் அனைத்து அதிகாரமும் படைத்தவர்கள். அவர்கள் ஒருமனதாக பழனிசாமியை, முழுமையாக ஏற்றுள்ளனர்.
எனவே, இது பின்னடைவு கிடையாது. தீர்ப்பு குறித்து நிர்வாகிகள் ஆலோசித்து, அடுத்து செய்ய வேண்டியது பற்றி முடிவு எடுப்போம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X