'ஜாதி,- மதம் அற்றவர்' சான்றிதழ் 3 வயது குழந்தைக்கு வழங்க உத்தரவு

Added : ஆக 18, 2022 | |
Advertisement
சென்னை:'ஜாதி, மதம் அற்றவர்' என, சான்றிதழ் கோரி விண்ணப்பித்தவருக்கு, இரண்டு வாரங்களில் சான்றிதழ் வழங்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை, மேற்கு அண்ணாநகரைச் சேர்ந்த மனோஜ் தாக்கல் செய்த மனு:எனக்கு, 2014ல் வித்யா என்பவருடன் திருமணம் நடந்தது. வெவ்வேறு மதங்களை சேர்ந்த இருவரும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு 3 வயதில்

சென்னை:'ஜாதி, மதம் அற்றவர்' என, சான்றிதழ் கோரி விண்ணப்பித்தவருக்கு, இரண்டு வாரங்களில் சான்றிதழ் வழங்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, மேற்கு அண்ணாநகரைச் சேர்ந்த மனோஜ் தாக்கல் செய்த மனு:எனக்கு, 2014ல் வித்யா என்பவருடன் திருமணம் நடந்தது. வெவ்வேறு மதங்களை சேர்ந்த இருவரும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு 3 வயதில் மகன் உள்ளார். மகன் யுவன் மனோஜை, அக்டோபரில் பள்ளியில் சேர்க்க திட்டமிட்டுள்ளோம். அதற்காக, 'ஜாதி,- மதம் அற்றவர்' என்ற சான்றிதழ் கோரி, அம்பத்துார் தாசில்தாரிடம் விண்ணப்பித்தோம். ஆனால், சான்றிதழ் வழங்கப்படவில்லை.

'ஜாதி, -மதம் அற்றவர்' என, எங்கள் மகனுக்கு சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு, நீதிபதி அப்துல் குத்துாஸ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு வழக்கறிஞர், மனுதாரர் கோரிய சான்றிதழை வழங்க, தாசில்தார் ஒப்புக் கொண்டுள்ளதாகக் கூறி, அதற்கான கடிதத்தை தாக்கல் செய்தார்.இதை ஏற்ற நீதிபதி, இரண்டு வாரங்களில் மனுதாரருக்கு சான்றிதழ் வழங்க உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X