ஒன்றுபட வேண்டும்: பன்னீர்செல்வம் விருப்பம்

Added : ஆக 18, 2022 | |
Advertisement
''சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு காணிக்கையாக அளிக்கிறோம்,'' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:இந்த தீர்ப்பை, அ.தி.மு.க.,வின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு காணிக்கையாக அளிக்கிறோம். தொண்டர்களின் விருப்பம் நடந்துள்ளது. இது தொண்டர்கள் இயக்கம். இதை யார் பிளவுபடுத்த நினைத்தாலும், அது
ஒன்றுபட வேண்டும்: பன்னீர்செல்வம் விருப்பம்

''சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு காணிக்கையாக அளிக்கிறோம்,'' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி:இந்த தீர்ப்பை, அ.தி.மு.க.,வின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு காணிக்கையாக அளிக்கிறோம். தொண்டர்களின் விருப்பம் நடந்துள்ளது. இது தொண்டர்கள் இயக்கம். இதை யார் பிளவுபடுத்த நினைத்தாலும், அது நடக்காது. சர்வாதிகாரமாக செயல்பட நினைக்கும் தனி நபருக்கோ, ஒரு குடும்பத்துக்கோ, தனி குழுவுக்கோ, இந்த கட்சியை கொடுக்க நினைத்தால், அது நடக்காது.
இது, அ.தி.மு.க.,வுக்கு முழுமையான வெற்றி. நாங்கள் ஏற்கனவே அறிக்கை வழியாக தெரிவித்துள்ளோம். அனைவரும் ஒன்றுபட வேண்டும். யாரெல்லாம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனரோ, அவர்களில் அ.தி.மு.க., கொள்கைக்கு, கோட்பாடுக்கு இசைந்து வருவோர் சேர்த்து கொள்ளப்படுவர்.நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பளித்து நடப்போம். தலைமை பொறுப்பில் இருப்பவர்களுக்கு, விமர்சனத்தை தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் இருக்க வேண்டும்.
அவமானங்களை யார் ஏற்படுத்தினாலும், அதை பொறுத்து, அனைவரையும் அரவணைத்து செல்வது, தலைமைப் பொறுப்பில் இருப்பவர் பண்பு. தொண்டர்கள் எனக்கு அளித்துள்ள பொறுப்பு, ஒருங்கிணைப்பாளர் பதவி. அனைவரும் ஒருங்கிணைந்து, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா தியாகங்களை மனதில் வைத்து செயல்படுவோம்.
அவர்கள் தரப்பு, எங்கள் தரப்பு கிடையாது. அ.தி.மு.க., ஒரே இயக்கம். அது தொண்டர்கள் இயக்கம்.பழனிசாமியுடன் இணைந்து செயல்படுவது குறித்து, தேவைப்பட்டால் கலந்து பேசி முடிவு எடுப்போம். எங்கள் எதிர்கால நடவடிக்கைகள் அனைத்தும், தொண்டர்கள் விருப்பப்படியும், தமிழக மக்கள் நலன் கருதியும் இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X