ரூ.40 லட்சம் வாடகை பாக்கி ரத்தன் பஜாரில் 130 கடைக்கு 'சீல்'

Added : ஆக 18, 2022 | |
Advertisement
சென்னை:சென்னை ரத்தன் பஜாரில், வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு, வருவாய்த் துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.சென்னை பிராட்வே, ரத்தன் பஜாரில் 77 கடைகள், பிரேசர் பிரிட்ஜ் சாலையில் 83 என, மாநகராட்சிக்கு சொந்தமாக மொத்தம் 160 கடைகள் உள்ளன.20 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த கடைகள், வாடகை அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளன.இங்கு துணிக்கடை, எலக்ட்ரானிக்ஸ், பொம்மைகள்,
ரூ.40 லட்சம் வாடகை பாக்கி ரத்தன் பஜாரில் 130 கடைக்கு 'சீல்'

சென்னை:சென்னை ரத்தன் பஜாரில், வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு, வருவாய்த் துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.

சென்னை பிராட்வே, ரத்தன் பஜாரில் 77 கடைகள், பிரேசர் பிரிட்ஜ் சாலையில் 83 என, மாநகராட்சிக்கு சொந்தமாக மொத்தம் 160 கடைகள் உள்ளன.20 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த கடைகள், வாடகை அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளன.இங்கு துணிக்கடை, எலக்ட்ரானிக்ஸ், பொம்மைகள், மொபைல்போன் உள்ளிட்ட கடைகள் உள்ளன.

இக்கடை ஒன்றிற்கு மாதத்திற்கு 450 ரூபாய், மாநகராட்சி சார்பில் வாடகையாக வசூலிக்கப் படுகிறது.இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக 160 கடைகள், வாடகை செலுத்தாமல் இருந்தன. இந்த வகையில் மொத்தம், 40 லட்சம் ரூபாய் வரி பாக்கி இருந்துள்ளது.

இதுகுறித்து பலமுறை மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பியும், கடைக்காரர்கள் எந்தவித பதிலும் அளிக்கவில்லை. இதையடுத்து, கடைகளுக்கு 'சீல்' வைப்பதாக வருவாய் துறை அதிகாரிகள் அறிவித்தனர். ஆன்லைன் வாயிலாக நேற்று முன்தினம் இரவு, 30 கடைக்காரர்கள் வாடகை பாக்கியை செலுத்தினர்.

இதையடுத்து, ராயபுரம் உதவி வருவாய் அலுவலர்கள், வரி மதிப்பீட்டாளர், உரிமம் ஆய்வாளர் ஆகியோர் அடங்கிய, 20 பேர் குழுவினர், மீதமுள்ள 130 கடைகளுக்கு நேற்று 'சீல்' வைத்தனர். எஸ்பிளனேடு, வடக்கு கடற்கரை காவல் நிலையத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.நிலுவை வாடகை தொகை செலுத்திய பின் 'சீல்' அகற்றப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X