கார் கதவை உடைத்து ரூ.20 லட்சம் கொள்ளை ப.வேலூரில் பட்டப்பகலில் துணிகரம்

Added : ஆக 18, 2022 | |
Advertisement
ப.வேலுார்:பட்டப்பகலில் கார் கதவை உடைத்து, 20 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்துச் சென்ற, ஹெல்மெட் அணிந்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் சுல்தான்பேட்டையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் பாலசுப்ரமணி, 49. அவர், நேற்று மதியம், 1:30 மணிக்கு, அப்பகுதியில் உள்ள வங்கியில், 8 லட்சம் ரூபாய் எடுத்து உள்ளார்.தொடர்ந்து, நிதி நிறுவனத்துக்கு சென்ற

ப.வேலுார்:பட்டப்பகலில் கார் கதவை உடைத்து, 20 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்துச் சென்ற, ஹெல்மெட் அணிந்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் சுல்தான்பேட்டையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் பாலசுப்ரமணி, 49. அவர், நேற்று மதியம், 1:30 மணிக்கு, அப்பகுதியில் உள்ள வங்கியில், 8 லட்சம் ரூபாய் எடுத்து உள்ளார்.தொடர்ந்து, நிதி நிறுவனத்துக்கு சென்ற அவர், அங்கு, சீட்டுப்பணம், 12 லட்சம் ரூபாய் எடுத்துள்ளார்.


மொத்தமாக, 20 லட்சம் ரூபாயை, தன் 'மிட்சுபிசி சீடியா' காரில் எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்துள்ளார்.வீட்டுக்கு வந்ததும், உடன் வந்த தன் மகன் ஹரிஹரனிடம், 25, பணத்தை எடுத்துக்கொண்டு, வண்டியை 'லாக்' செய்துவிட்டு வரும்படி கூறியுள்ளார். அவரது மகனோ, பணத்தை எடுக்காமல், காரை மட்டும் 'லாக்' செய்துவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.


அவர்களை பின் தொடர்ந்து, இரண்டு பைக்கில், ஹெல்மெட் அணிந்து வந்த, மூன்று மர்ம நபர்கள், வீட்டில் நிறுத்தியிருந்த காரின் கதவை உடைத்து, உள்ளே இருந்த, 20 லட்சம் ரூபாயை கொள்ளை அடித்துச் சென்றுவிட்டனர்.பகல், 2:00 மணிக்கு வெளியே வந்த பார்த்த போது, கார் கதவு திறந்து, பணம் கொள்ளை அடிக்கப்பட்டது அறிந்து பாலசுப்பிரமணி அதிர்ச்சி அடைந்தார்.


இது குறித்து ப.வேலுார் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை பார்த்தபோது, கொள்ளை அடிக்க பயன்படுத்தப்பட்ட, இரு பைக்குகளும், உள்ளூர் பதிவெண் கொண்டதாக உள்ளதால், இதில் அப்பகுதியைச் சேர்ந்தவர்களே ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X