அணையில் கட்டமைப்பு வசதி மேம்பாடு வெளிநாட்டு நிறுவன உதவியுடன் பணி

Added : ஆக 18, 2022 | |
Advertisement
ஊட்டி:குந்தா மின் வட்டத்தில், பில்லுார் அணையில் உள்ள சகதியை அகற்றி, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, வெளிநாட்டு நிறுவனத்தின் உதவியுடன் பணிகளை துவக்க, மின் வாரியம் திட்டமிட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில், குந்தா, பைக்காரா நீர் மின் திட்டத்தின் கீழ், அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு, குந்தா, கெத்தை, பில்லுார், முக்கூர்த்தி, பைக்காரா, சாண்டினல்லா, கிளன்மார்கன், மாயார்,

ஊட்டி:குந்தா மின் வட்டத்தில், பில்லுார் அணையில் உள்ள சகதியை அகற்றி, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, வெளிநாட்டு நிறுவனத்தின் உதவியுடன் பணிகளை துவக்க, மின் வாரியம் திட்டமிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில், குந்தா, பைக்காரா நீர் மின் திட்டத்தின் கீழ், அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு, குந்தா, கெத்தை, பில்லுார், முக்கூர்த்தி, பைக்காரா, சாண்டினல்லா, கிளன்மார்கன், மாயார், பார்சன்ஸ்வேலி, போர்த்தி மந்து ஆகிய, 13 அணைகள் உள்ளன.அணைகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் வாயிலாக, தினசரி, 833.65 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ள முடியும். குந்தா மின் வட்டத்தில் அதிகபட்சமாக, 505 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது.

இங்குள்ள அணைகளில் பல ஆண்டுகளாக துார் வாரப்படாததால் சகதி அதிகரித்துள்ளது. மழை காலங்களில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.தென்மேற்கு பருவமழையிலும் கூட, தண்ணீர் தேக்கி வைக்க முடியாமல் ஒரு வாரத்திற்கு உபரிநீர் வெளியேற்றப்பட்டது.இதே நிலை தொடர்ந்தால், அணை மற்றும் மின் நிலையங்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால், உலக வங்கி நிதி உதவியுடன், அணைகளில் தேங்கியுள்ள சகதியை அகற்ற மின் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

குந்தா மின் வட்டம் மேற்பார்வை செயற்பொறியாளர் செந்தில்ராஜன் கூறியதாவது:நீலகிரியில் உள்ள அணைகளை துார் வாரி, கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்து, சென்னை தலைமை அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து, மின்வாரிய தலைமை அலுவலகம் ஒரு குழு அமைத்துள்ளது.

இக்குழு விரைவில் அணைகளை ஆய்வு செய்ய உள்ளது.முதற்கட்டமாக, பில்லுார் அணையில் சகதி மற்றும் கட்டமைப்பை மேம்படுத்த, வெளிநாட்டு நிறுவன ஒப்பந்தத்தின் வாயிலாக நவீன இயந்திரங்கள் உதவியுடன் பணி துவங்க உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X