ஊத்தங்கரை அருகே 600 ஆண்டு பழமையான கல்வெட்டுடன் நடுகற்கள் கண்டுபிடிப்பு

Added : ஆக 18, 2022 | |
Advertisement
கிருஷ்ணகிரி:ஊத்தங்கரை அருகே, 600 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுடன், இரண்டு நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டன.கிருஷ்ணகிரி மாவட்டம், பையூரை சேர்ந்த கல்லுாரி மாணவர் ஆனந்தராஜ், ஊத்தங்கரை தாலுகா ராமகிருஷ்ணம்பதி பஞ்., ஆதாலியூரில், குப்பாகவுண்டர் என்பவரது நிலத்தில் இரண்டு நடுகற்கள் கல்வெட்டுடன் உள்ளதாக கூறினார்.அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகமும், வரலாற்று ஆய்வு
ஊத்தங்கரை அருகே 600 ஆண்டு பழமையான கல்வெட்டுடன் நடுகற்கள் கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி:ஊத்தங்கரை அருகே, 600 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுடன், இரண்டு நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்டம், பையூரை சேர்ந்த கல்லுாரி மாணவர் ஆனந்தராஜ், ஊத்தங்கரை தாலுகா ராமகிருஷ்ணம்பதி பஞ்., ஆதாலியூரில், குப்பாகவுண்டர் என்பவரது நிலத்தில் இரண்டு நடுகற்கள் கல்வெட்டுடன் உள்ளதாக கூறினார்.அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகமும், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணக்குழுவும் இணைந்து, அந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டது.

மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: இரண்டு நடுகற்களும், 600 ஆண்டுகள் பழமையானவை. முதலாவது நடுகல்லில் உள்ள வீரன், மற்றொரு வீரனின் தலையை பிடித்து குத்துவது போலவும், அருகே வாள் மற்றும் கேடயத்துடன் ஒரு வீரன் நிற்பது போலவும் காட்டப்பட்டுள்ளது. பிளவுமுனை கத்தி, வேலின் மறுமுனையில் சாமரம் போன்ற அமைப்பு ஆகியவை, குட்டூர் நடுகல்லிலும் உள்ளன.

ஆமூரை சேர்ந்த ஆளும் கனப்பெருமக்கள் இருவர், தகடூரில் நடந்த போரில் சிறு வேளுடையான் என்பவரை கொன்று, தாங்களும் இறந்ததை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. இரண்டாவதாக உள்ள பன்றிகுத்திப்பட்டான் கல்வெட்டில், ஒரு வீரன் இரண்டு நாய்களுடன் பன்றியை குத்தும்போது இறந்துள்ளான்.

விஜயநகர காலத்தில் புகழ்பெற்ற தலைவனான தகடூர் அரும்பார்கிழான் என்பவர் காலத்தில் செங்கன் சீராளன் என்பவன் பன்றிகுத்தி இறந்த தகவலை, இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.ஆய்வில், வரலாற்று ஆய்வுக்குழு தலைவர் நாராயணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன் உடனிருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X