நெட்டப்பாக்கம் : நாட்டின் 75வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை யொட்டி, சூரமங்கலம் கிராம மக்கள் சார்பில், 75 தென்னங்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.சூரமங்கலம் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு துணை சபாநாயகர் ராஜவேலு தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டு, துவக்கி வைத்தார். நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் அரசு பள்ளிக்கு பின்புறம் உள்ள இடங்களில் 75 தென்னங்கன்றுகள், 75 மாமர கன்றுகள் நடப்பட்டன.நிகழ்ச்சியில் என்.ஆர்.காங்., பிரமுகர்கள் மற்றும் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.