தீபாவளிக்கு ஜவுளி 'ஆர்டர்' இல்லைஉற்பத்தியாளர்கள் கவலை

Added : ஆக 18, 2022 | |
Advertisement
பள்ளிபாளையம்:தீபாவளி ஆர்டர்கள் எதிர்பார்த்த அளவு இல்லாததால், பள்ளிபாளையம் பகுதி ஜவுளி உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் சுற்று வட்டாரத்தில் ஜவுளி முக்கிய தொழிலாக உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் துணிகள், இந்தியா முழுவதும் விற்பனைக்கு செல்கின்றன.கடந்த சில மாதங்களாக பஞ்சு விலை உயர்வால், நுால் விலையும் உயர்ந்தது. இதனால்,

பள்ளிபாளையம்:தீபாவளி ஆர்டர்கள் எதிர்பார்த்த அளவு இல்லாததால், பள்ளிபாளையம் பகுதி ஜவுளி உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் சுற்று வட்டாரத்தில் ஜவுளி முக்கிய தொழிலாக உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் துணிகள், இந்தியா முழுவதும் விற்பனைக்கு செல்கின்றன.கடந்த சில மாதங்களாக பஞ்சு விலை உயர்வால், நுால் விலையும் உயர்ந்தது. இதனால், உற்பத்தி செய்யப்பட்ட துணிகள் விற்பனையாகாமல் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ள

தீபாவளி சமயத்தில் விற்பனை அதிகரிக்கும், புதிய ஆர்டர் வரும் என, எதிர்பார்ப்பு இருந்தது. தீபாவளிக்கு ஒரிரு மாதம் தான் உள்ளது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு ஆர்டர்கள் வராததால், ஐவுளி உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பள்ளிபாளையம் வட்டார ஜவுளி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் கந்தசாமி கூறியதாவது:வழக்கமாக ஆடி மாதம் முடிந்தவுடன், சட்டை, சேலை, வேட்டி, சுடிதார் போன்றவற்றுக்கு தீபாவளி ஆர்டர் வந்து விடும். உற்பத்தி, விற்பனை இரு மடங்கு அதிகரிக்கும். இந்தாண்டு, இன்னும் தீபாவளி ஆர்டர்கள் வரவில்லை.

வட மாநில வியாபாரிகளும், ஜவுளி கொள்முதலை குறைத்து விட்டனர். தற்போது, விற்பனை வழக்கத்தை விட பாதி தான் நடக்கிறது.இதனால் ஐவுளி உற்பத்தி தொழிலை தொடர்ந்து நடத்த முடியுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X