பட்டா ரத்துக்கு பொதுநல வழக்குஅபராதம் விதித்தது உயர் நீதிமன்றம்

Added : ஆக 18, 2022 | |
Advertisement
மதுரை:சிவகங்கை மாவட்டம் திருப்பத்துாரில் பட்டாவை ரத்து செய்யக் கோரி தாக்கலான பொதுநல வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது.திருப்பத்துார் முத்துக்கிருஷ்ணன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:திருப்பத்துாரில் குறிப்பிட்ட சர்வே எண்ணில் உள்ள நிலம் ஒரு வழிபாட்டு
பட்டா ரத்துக்கு பொதுநல வழக்குஅபராதம் விதித்தது உயர் நீதிமன்றம்

மதுரை:சிவகங்கை மாவட்டம் திருப்பத்துாரில் பட்டாவை ரத்து செய்யக் கோரி தாக்கலான பொதுநல வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது.
திருப்பத்துார் முத்துக்கிருஷ்ணன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:திருப்பத்துாரில் குறிப்பிட்ட சர்வே எண்ணில் உள்ள நிலம் ஒரு வழிபாட்டு தலத்திற்குரிய மானிய நிலம். அதன் ஒரு பகுதி நிலத்திற்கு, திருப்பத்துார் வர்த்தகர்சங்க செயலர் பெயரில் மோசடியாக பட்டா வழங்கப்பட்டுள்ளது.
சங்க தலைவர், செயலருக்கு எதிராக தமிழக வருவாய்த்துறை செயலர், சிவகங்கை கலெக்டரிடம் மனு அளித்தேன். மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு கூறியிருந்தார்.
நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா அமர்வு விசாரித்தது. வர்த்தகர் சங்கம் தரப்பில், '1975 முதல், நிலம் சங்கத்தின் பெயரில் உள்ளது. அதில் கட்டடம் கட்டப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டது.நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், 'சட்டத்தின் நடைமுறைகளை தவறாக பயன்படுத்தி பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளது தெளிவாகிறது. மனுவை தள்ளுபடி செய்கிறோம். 'மதுரை காந்தி மியூசியத்திற்கு மனுதாரர் 10 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்' என உத்தரவிட்டனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X