கோழிப்பண்ணைக்கு கடத்தல் 25 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

Added : ஆக 18, 2022 | |
Advertisement
புதுக்கோட்டை:திருமயம் வழியாக, கோழிப்பண்ணைகளுக்கு கடத்த முயன்ற 25 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை, வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர்.புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே, நமணசமுத்திரம் பகுதியில், நேற்று அதிகாலையில் வருவாய்த்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, தார்பாய் மூடிய நிலையில், லோடு ஏற்றிச் சென்ற லாரியை அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர்.தர்மபுரி

புதுக்கோட்டை:திருமயம் வழியாக, கோழிப்பண்ணைகளுக்கு கடத்த முயன்ற 25 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை, வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே, நமணசமுத்திரம் பகுதியில், நேற்று அதிகாலையில் வருவாய்த்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, தார்பாய் மூடிய நிலையில், லோடு ஏற்றிச் சென்ற லாரியை அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த வீரமணி, 40, என்ற லாரி டிரைவரிடம் விசாரித்த போது, சிவகங்கை பகுதியில், குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, திருமயம் வழியாக நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளார். அதனால், 500 மூட்டைகளில் இருந்த 25 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, திருமயம் நுகர்பொருள் வாணிபக்கழக குடோனில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து, நமணசமுத்திரம் போலீசார் லாரி டிரைவர் வீரமணியை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X