வாலிபரின் மொபைல் போன் ஆய்வுக்காக அனுப்பிவைப்பு

Added : ஆக 18, 2022 | |
Advertisement
சேலம்:சேலத்தில், ஐ.எஸ்., பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்த வாலிபரின் மொபைல் போனை, பரிசோதனைக்காக போலீசார் திருவனந்தபுரம் அனுப்பினர்.தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் ஆசிக், 22. சேலம், கோட்டையில் தங்கி வெள்ளி பட்டறையில் பணிபுரிந்தார். அவரை, இந்த மாத தொடக்கத்தில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்து, மொபைல் போன், பென் டிரைவ், பாகிஸ்தான் கொடியை பறிமுதல்

சேலம்:சேலத்தில், ஐ.எஸ்., பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்த வாலிபரின் மொபைல் போனை, பரிசோதனைக்காக போலீசார் திருவனந்தபுரம் அனுப்பினர்.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் ஆசிக், 22. சேலம், கோட்டையில் தங்கி வெள்ளி பட்டறையில் பணிபுரிந்தார். அவரை, இந்த மாத தொடக்கத்தில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்து, மொபைல் போன், பென் டிரைவ், பாகிஸ்தான் கொடியை பறிமுதல் செய்து, டவுன் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் வழக்குப்பதிவு செய்து, ஆசிக்கை கைது செய்தனர்.

இந்நிலையில், கடந்த, 12ல், போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். அதில் கிடைத்த தகவல்படி, அவரது மொபைல் போனை சோதனை செய்ய முடிவு செய்தனர்.அதன்படி நீதிமன்ற அனுமதியுடன், நேற்று முன்தினம், ஆசிக் மொபைல் போனை, போலீசார் திருவனந்தபுரத்துக்கு சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.அதன் முடிவுப்படி, ஆசிக்கிடம் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியல் தயாரித்து விசாரிக்கப்படும் என, போலீசார் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X