விரிசல் ஏற்பட்ட பகுதிகளில் மண்வள விஞ்ஞானி ஆய்வு

Added : ஆக 18, 2022 | |
Advertisement
கூடலுார்:'''கூடலுாரில், விரிசல் ஏற்பட்ட பகுதிகளில், பூமிக்கு அடியில் பாறை வெடிப்புக்கான சாத்திய கூறுகள் குறைவு,'' என, இந்திய மண்வளம் மற்றும் நீர்வள ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி மணிவண்ணன் கூறினார்.நீலகிரி மாவட்டம் கூடலுாரில், சனீஸ்வரன் கோவில் அருகே, தேசிய நெடுஞ்சாலை, அதை ஒட்டிய தனியார் தேயிலை தோட்டத்தில், நேற்று முன்தினம் விரிசல் ஏற்பட்ட பகுதியை அதிகாரிகள் நேற்று
விரிசல் ஏற்பட்ட பகுதிகளில் மண்வள விஞ்ஞானி ஆய்வு

கூடலுார்:'''கூடலுாரில், விரிசல் ஏற்பட்ட பகுதிகளில், பூமிக்கு அடியில் பாறை வெடிப்புக்கான சாத்திய கூறுகள் குறைவு,'' என, இந்திய மண்வளம் மற்றும் நீர்வள ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி மணிவண்ணன் கூறினார்.
நீலகிரி மாவட்டம் கூடலுாரில், சனீஸ்வரன் கோவில் அருகே, தேசிய நெடுஞ்சாலை, அதை ஒட்டிய தனியார் தேயிலை தோட்டத்தில், நேற்று முன்தினம் விரிசல் ஏற்பட்ட பகுதியை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.நடுகூடலுார் பகுதியில், 14 வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. அதில், 10 வீடுகளில் வசிப்பவர்கள் மாற்றிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
விரிசல் ஏற்பட்ட பகுதிகளை, இந்திய மண்வளம் மற்றும் நீர்வள ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி மணிவண்ணன், தேசிய நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர்செல்வம், புவியியல் மற்றும் சுரங்க துறை உதவி புவியியலாளர்கள் லோகநாதன், சரவணன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
மணிவண்ணன் கூறுகையில், ''கூடலுார் பகுதியில் தொடர்ச்சியாக அதிக மழை பெய்ததால், பூமிக்கு அடியில் நீரோட்டம் அதிகமாகி, பாறை இல்லாத நல்ல மண்ணுள்ள பகுதிகளுக்குள் தண்ணீர் இறங்கியுள்ளது. அதனால் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.''இப்பகுதியில் பூமிக்கு அடியில் பாறை வெடிப்பு இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவு. இது குறித்து, புவியியல் ஆய்வாளர்கள் ஆராய்ந்து முடிவு செய்யலாம். ''விரிசல் ஏற்பட்ட பகுதிகளில், தண்ணீர் பூமிக்கு அடியில் செல்லாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X