குற்றப் பின்னணியில் பீஹார் அமைச்சர்கள்

Updated : ஆக 18, 2022 | Added : ஆக 18, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
புதுடில்லி :பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசில் பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களில் 70 சதவீதம் பேர் மீது, குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரியவந்துஉள்ளது.பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ், துணை முதல்வராக உள்ளார். சமீபத்தில் இந்த
 குற்றப் பின்னணியில் பீஹார் அமைச்சர்கள்

புதுடில்லி :பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசில் பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களில் 70 சதவீதம் பேர் மீது, குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரியவந்துஉள்ளது.பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது.
ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ், துணை முதல்வராக உள்ளார்.


latest tamil news



சமீபத்தில் இந்த கூட்டணியைச் சேர்ந்த 31 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இந்நிலையில் ஜனநாயகத்துக்கான சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுஉள்ளதாவது:பீஹாரில் 2020ல் நடந்த சட்டசபை தேர்தலின் போது, போட்டியிட்ட வேட்பாளர்கள் தாக்கல் செய்த மனுக்களை ஆய்வு செய்தோம்.
அதில், எத்தனை பேர் மீது வழக்குகள் உள்ளன என்ற விபரமும் இடம் பெற்றுள்ளது. இதன்படி, தற்போது பீஹார் அமைச்சரவையில் உள்ளவர்களில், 23 பேர் மீது, அதாவது, 70 சதவீதம் பேர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இவர்
களில் 17 பேர் மீது கடுமையான வழக்குகள் உள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
18-ஆக-202212:43:54 IST Report Abuse
jayvee குற்றப்பின்னணி இல்லையென்றால் கவுன்சிலர் கூட ஆக முடியாது ..இதுதான் இன்றைய ஜனநாயகத்தின் சாபக்கேடு ..
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
18-ஆக-202209:23:17 IST Report Abuse
duruvasar இது மஹா கட்பந்தன் அரசு என்பது அனைவரும் அறிந்ததே. Ipc யில் உள்ள எல்லா செக்சனிலும் வழகுகள் உள்ளவர்கள் இருப்பார்கள்.
Rate this:
Cancel
18-ஆக-202207:33:00 IST Report Abuse
தமிழ் கவலை வேண்டாம். அனைவரும் பிஜேபியில் சேர்ந்தால் புனிதராகி விடுவர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X