கோவில் மேம்பாட்டுக்கு நிதி அறநிலையத்துறை தகவல்

Added : ஆக 18, 2022 | |
Advertisement
மதுரை:'கோவில்களின் மேம்பாட்டு பணிக்கு, அரசு போதிய நிதி ஒதுக்கியுள்ளது' என, அறநிலையத் துறை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்தது.ஹிந்து தர்ம பரிஷத் மேலாண்மை அறங்காவலர் ரமேஷ், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் குறிப்பிட்டிருந்ததாவது:தமிழக அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களுக்குச் சொந்தமான தெப்பக்குளங்கள் மாசடைந்துள்ளன.கழிவு நீர்

மதுரை:'கோவில்களின் மேம்பாட்டு பணிக்கு, அரசு போதிய நிதி ஒதுக்கியுள்ளது' என, அறநிலையத் துறை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்தது.
ஹிந்து தர்ம பரிஷத் மேலாண்மை அறங்காவலர் ரமேஷ், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் குறிப்பிட்டிருந்ததாவது:தமிழக அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களுக்குச் சொந்தமான தெப்பக்குளங்கள் மாசடைந்துள்ளன.கழிவு நீர் கலப்பது, குப்பை குவிப்பதை தடுக்க வேண்டும். தெப்பக்குளங்களை புனரமைத்து, பராமரிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அவர் குறிப்பிட்டு இருந்தார்.
அறநிலையத்துறை தரப்பில், '2,359 தெப்பக்குளங்களில் 1,291 குளங்கள் நல்ல நிலையில் உள்ளன; 911 குளங்கள் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளன; 37 குளங்களில் திருப்பணி மேற்கொள்ளப்படும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.
நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா அமர்வு நேற்று மீண்டும் விசாரித்தது. அறநிலையத்துறை தரப்பில், 'அடிப்படை வசதிகள் செய்ய ஒவ்வொரு கோவிலுக்கும் அரசு தனித்தனியாக நிதி ஒதுக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'நிர்வாக பணியை ஆட்சியாளர்கள் பார்த்துக் கொள்வர். சுகாதார ஆய்வாளருக்குரிய பணியை, நீதிமன்றம் செய்ய முடியாது' என கூறி, வழக்கை ஒரு மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X