நிதி கொடுத்ததால் 'டிஸ்மிஸ்' ஆன நிதியமைச்சரின் தாத்தா!:திருச்சியில் தியாகிகள் புகைப்பட கண்காட்சி

Updated : ஆக 18, 2022 | Added : ஆக 18, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
திருச்சி:ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த புகைப்பட கண்காட்சி, திருச்சி மெயின் கார்டுகேட்டில் உள்ள தொல்பொருள் ஆய்வுத்துறை மண்டல அலுவலகத்தில் துவங்கியுள்ளது. இதை, 21ம் தேதி வரை பார்வையிடலாம்சுதந்திர தின 75ம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, திருச்சி மண்டல இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை சார்பில், இந்த புகைப்பட கண்காட்சி
நிதி கொடுத்ததால் 'டிஸ்மிஸ்' ஆன நிதியமைச்சரின் தாத்தா!:திருச்சியில் தியாகிகள் புகைப்பட கண்காட்சி

திருச்சி:ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த புகைப்பட கண்காட்சி, திருச்சி மெயின் கார்டுகேட்டில் உள்ள தொல்பொருள் ஆய்வுத்துறை மண்டல அலுவலகத்தில் துவங்கியுள்ளது. இதை, 21ம் தேதி வரை பார்வையிடலாம்

சுதந்திர தின 75ம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, திருச்சி மண்டல இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை சார்பில், இந்த புகைப்பட கண்காட்சி துவங்கியுள்ளது.

இதில், திருச்சியைச் சேர்ந்த டாக்டர் ராஜன், டி.எஸ்.அருணாச்சலம், ரத்தினவேல் தேவர், சையது முர்துசா, முசிறியை சேர்ந்த வெங்கடராம் அய்யர் என ஏராளமான தியாகிகளின் விபரங்கள் இடம்பெற்று உள்ளன.


திருச்சி மாவட்டம் முசிறி தென்வடல் அக்ரஹாரத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி அய்யர் மகன் வேங்கடராம் அய்யர். இவர், 1892 ஜூன் 14ல் பிறந்தார்.மதுரையில் தொடக்கக்கல்வியும், கோல்கட்டாவில் பி.இ.இ., - ஏ.எம்.இ.இ., படித்தார். 1929ல் மேட்டூர்அணை கட்டுமானத்தின் போது, எலக்ட்ரிக்கல் இன்ஜினியராக பணிபுரிந்தார்.


விடுதலை போராட்டத்தில் அவர் ஆர்வம் கொண்டிருந்தார். 1930ல் தமிழகத்தில் ராஜாஜி உப்பு சத்தியாகிரகத்தை துவங்கினார். அந்த போராட்டத்துக்கு வேங்கடராம் அய்யர், தன் சம்பளத்தில் சேர்த்து வைத்திருந்த, 400 ரூபாயை, ராஜாஜியிடம் கொடுத்தார்.இந்த போராட்டத்தில் ராஜாஜி, டாக்டர் ராஜன் ஆகிய காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.


அப்போது, டாக்டர் ராஜன் வீட்டில் இருந்து, சத்தியாகிரக போராட்டத்துக்கு வேங்கடராம் நிதியுதவி செய்ததற்கான ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.இதையடுத்து, அரசுக்கு எதிரான சதி என அறிவித்து, அவரை பொதுப்பணித்துறை பதவியில் இருந்து ஆங்கிலேய அரசு, 'டிஸ்மிஸ்' செய்தது. அவரை வேறு எந்த பணியிலும் அமர்த்தக்கூடாது என்றும் உத்தரவிட்டது.


வேலையை பறிபோன பின் காரைக்குடி தனியார் நிறுவனத்தில் சேர்ந்தார். 1936ல், கொச்சி துறைமுக கட்டுமான பணியின்போது, பலரின் ஆட்சேபனைக்கு பின் இன்ஜினியராக சேர்ந்தார். பின், 1948ல் பணியில் இருந்து ஓய்வு பெற்று, தன் சொந்த ஊரான முசிறிக்கு வந்து விவசாயப்பணிகளை மேற்கொண்டவர், 1965 நவம்பர் 15ல் இறந்தார்.


சுதந்திர போராட்டத்திற்காக, 92 ஆண்டுகளுக்கு முன் 400 ரூபாய் வழங்கி, அதற்காக அரசுப்பணியை இழந்த வேங்கடராம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் தாத்தா. இந்த கண்காட்சி குறித்து இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை திருச்சி வட்ட இயக்குனர் அருண்ராஜ் கூறுகையில், ''கண்காட்சியை பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், வரும் 21ம் தேதி மாலை 5:00 மணி வரை பார்வையிடலாம்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறதுவாசகர் கருத்து (5)

raju - Madurai,இந்தியா
19-ஆக-202216:14:11 IST Report Abuse
raju //////
Rate this:
Cancel
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
18-ஆக-202215:52:44 IST Report Abuse
M S RAGHUNATHAN இவர்கள் அந்தணர்கள் ஆயிற்றே. எப்படி திராவிஷகும்பல்.இவர்களை.பற்றி.எழுதும்
Rate this:
Cancel
Vijai - chennai,இந்தியா
18-ஆக-202210:55:13 IST Report Abuse
Vijai ம்ஹ்ம்ம். அது அந்தக்காலம். இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு பிறகு கருணா மற்றும் லாலு குடும்பத்தினர் கிட்ட நாட்டை தோத்துட்டு நிக்கறோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X