ரூ.2000 லஞ்சம் வாங்கிய 'சர்வேயர்' கைது

Added : ஆக 18, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சங்ககிரி:சங்ககிரி ஆர்.எஸ். அருகே பக்காளியூரை சேர்ந்த லாரி உரிமையாளர் கணேசன். இவருக்கு கஸ்துாரிப்பட்டியில் நிலம் உள்ளது. அந்த நிலத்தை அளவீடு செய்து 'சப்-டிவிஷன்' செய்து தர சங்ககிரி தாலுகா அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்தார். ஆனால் சர்வேயர்கள் இழுத்தடித்து வந்தனர்.கடந்த வாரம் தாலுகா அலுவலகம் 'சர்வே' பிரிவில் சுற்றுக்குழு நிலஅளவையராக பணிபுரியும் வைத்தீஷ்குமாரை

சங்ககிரி:சங்ககிரி ஆர்.எஸ். அருகே பக்காளியூரை சேர்ந்த லாரி உரிமையாளர் கணேசன். இவருக்கு கஸ்துாரிப்பட்டியில் நிலம் உள்ளது. அந்த நிலத்தை அளவீடு செய்து 'சப்-டிவிஷன்' செய்து தர சங்ககிரி தாலுகா அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்தார்.

ஆனால் சர்வேயர்கள் இழுத்தடித்து வந்தனர்.கடந்த வாரம் தாலுகா அலுவலகம் 'சர்வே' பிரிவில் சுற்றுக்குழு நிலஅளவையராக பணிபுரியும் வைத்தீஷ்குமாரை பார்த்து நிலத்தை அளந்து உட்பிரிவு செய்து தர கோரினார். அவர் 2000 ரூபாய் கொடுத்தால் மட்டுமே செய்து தர முடியும் என கூறினார்.

விரக்தி அடைந்த கணேசன் சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் கூறினார். அவர்கள் கொடுத்த அறிவுரைப்படி நேற்று ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்தார். வைத்தீஷ்குமார் வாங்கும்போது மாவட்ட லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. கிருஷ்ணராஜ் தலைமையில் போலீசார் கைது செய்தனர். தாலுகா அலுவலகத்தில் இருந்த ஆவணங்களையும் கைப்பற்றினர். வைத்தீஷ்குமார் பணிக்கு சேர்ந்து மூன்றாம் ஆண்டின் முதல் நாளான நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
18-ஆக-202213:07:38 IST Report Abuse
jayvee இப்போது லஞ்ச தொகை பத்தாயிரமாக மாறிவிட்டது .. குறைத்து வாங்கினால் இப்படித்தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X