மக்கள் ஆதரவு கோரி கெஜ்ரிவால் நாடு முழுதும் சுற்றுப்பயணம்

Added : ஆக 18, 2022 | |
Advertisement
புதுடில்லி:மக்களின் ஆதரவைத் திரட்டுவதற்காக டில்லி முதல்வரும் ஆத் ஆத்மி கட்சி நிறுவனருமான அரவிந்த் கெஜ்ரிவால் நாடு முழுதும் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.வரும் 2024ல் லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளது. ஏற்கனவே டில்லியிலும் பஞ்சாபிலும் ஆட்சியில் உள்ள ஆத் ஆத்மி லோக்சபா தேர்தல் வாயிலாக மேலும் பல மாநிலங்களில் காலூன்ற திட்டமிட்டுள்ளது.இந்நிலையில் டில்லியில் உள்ள தல்கதோரா

புதுடில்லி:மக்களின் ஆதரவைத் திரட்டுவதற்காக டில்லி முதல்வரும் ஆத் ஆத்மி கட்சி நிறுவனருமான அரவிந்த் கெஜ்ரிவால் நாடு முழுதும் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.

வரும் 2024ல் லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளது. ஏற்கனவே டில்லியிலும் பஞ்சாபிலும் ஆட்சியில் உள்ள ஆத் ஆத்மி லோக்சபா தேர்தல் வாயிலாக மேலும் பல மாநிலங்களில் காலூன்ற திட்டமிட்டுள்ளது.இந்நிலையில் டில்லியில் உள்ள தல்கதோரா மைதானத்தில் ஆம் ஆத்மி சார்பாக நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அதில் கெஜ்ரிவால் பேசியதாவது:சுதந்திரம் அடைந்ததில் இருந்து நாட்டின் முன்னேற்றம் மிகவும் மெதுவாக உள்ளது. கடந்த 75 ஆண்டுகளாக நாட்டை ஆண்டவர்கள் தங்கள் வீடுகளையும் உறவினர்களின் வீடுகளையும் செல்வத்தால் நிரப்பியதை தவிர வேறு எதையும் செய்யவில்லை.

இந்தியாவை உலகின் முதன்மையான நாடாக மாற்ற ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச மற்றும் தரமான கல்வி ஒவ்வொரு குடிமகனுக்கும் இலவச மற்றும் தரமான மருத்துவம் வேலைவாய்ப்பு சம உரிமைகள் உள்ளிட்டவை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்தியர்கள் உலகிலேயே மிகவும் புத்திசாலிகள் மற்றும் கடின உழைப்பாளிகள்.

இருந்தும் நாம் ஏன் இன்னும் பின்தங்கி இருக்கிறோம்? கடவுள் இந்தியாவிற்கு ஆறுகள் மலைகள் மூலிகைகள் பயிர்கள் கடல் என அனைத்தையும் கொடுத்துள்ளார்.இந்தியாவால் உலகை வழிநடத்த முடியும். நாட்டின் 130 கோடி மக்களும் ஒன்றிணைந்து ஆம் ஆத்மியின் 'மேக் இந்தியா நம்பர் 1' என்ற தேசிய செயல்திட்டத்தில் இணையும்போது இது சாத்தியமாகும். இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X