ஜாமின் மனுவை விசாரிக்க கோரி பள்ளி தாளாளர் ஐகோர்ட்டில் வழக்கு

Added : ஆக 18, 2022 | |
Advertisement
சென்னை:பள்ளி மாணவி இறப்பு வழக்கில் ஜாமின் மனுவை விசாரித்து முடிவெடுக்க விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்துக்கு உத்தரவிடக் கோரி பள்ளி தாளாளர் ரவிக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கணியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி ஜூலை 13ம் தேதி இறந்தார். இந்த வழக்கில் பள்ளி தாளாளர்

சென்னை:பள்ளி மாணவி இறப்பு வழக்கில் ஜாமின் மனுவை விசாரித்து முடிவெடுக்க விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்துக்கு உத்தரவிடக் கோரி பள்ளி தாளாளர் ரவிக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கணியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி ஜூலை 13ம் தேதி இறந்தார். இந்த வழக்கில் பள்ளி தாளாளர் ரவிகுமார் செயலர் சாந்தி முதல்வர் சிவசங்கரன் ஆசிரியைகள் ஹரிபிரியா கீர்த்திகா ஆகியோர் ஜூலை 17ல் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ரவிக்குமார் ஜாமின் கோரி விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனு மீதான விசாரணை தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.இந்த நிலையில் ஜாமின் மனுவை விசாரிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ரவிக்குமார் மனு தாக்கல் செய்துள்ளார்.


மனு விபரம்


மாணவி ஸ்ரீமதி இறப்பு குறித்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி ஜாமின் மனு மீதான விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. என் ஜாமின் மனுவை காலதாமதம் செய்யாமல் விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் விசாரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் ராஜ்திலக் ஆஜராகி ''மாணவி மரணம் குறித்தான வழக்கு உயர் நீதிமன்றத்தில் ஆக., 29ல் விசாரணைக்கு வருகிறது.

''விழுப்புரம் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. மேலும் ஜிப்மர் மருத்துவமனை ஆவணங்கள் இதுவரை கிடைக்கவில்லை. எனவே ஜாமின் மனுவை விசாரிக்க உத்தரவிடக் கூடாது'' என வாதிட்டார்.இதையடுத்து மனு மீதான விசாரணையை ஆக., 30க்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X