எது இலவசம் : வரையறுக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Updated : ஆக 18, 2022 | Added : ஆக 18, 2022 | கருத்துகள் (18) | |
Advertisement
புதுடில்லி:'தேர்தல் நேரங்களில் இலவசங்கள் தொடர்பாக வாக்குறுதி அளிக்கக் கூடாது என, அரசியல் கட்சிகளுக்கோ, தனி நபர்களுக்கோ தடை விதிக்க முடியாது. 'இலவசம் என்றால் எது என்பதை வரையறுக்க வேண்டும். இது தொடர்பாக அனைத்து கட்சிகளும் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுடில்லியைச் சேர்ந்த அஸ்வினி உபாத்யாய் என்ற வழக்கறிஞர்,
எது இலவசம் : வரையறுக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடில்லி:'தேர்தல் நேரங்களில் இலவசங்கள் தொடர்பாக வாக்குறுதி அளிக்கக் கூடாது என, அரசியல் கட்சிகளுக்கோ, தனி நபர்களுக்கோ தடை விதிக்க முடியாது. 'இலவசம் என்றால் எது என்பதை வரையறுக்க வேண்டும். இது தொடர்பாக அனைத்து கட்சிகளும் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.

புதுடில்லியைச் சேர்ந்த அஸ்வினி உபாத்யாய் என்ற வழக்கறிஞர், தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகள் இலவச வாக்குறுதி அளிப்பதை தடை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.


latest tamil news


அந்து மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகள், தாங்கள் வெற்றி பெற்றால் இலவசங்களை தருவதாக வாக்குறுதி அளிக்கின்றன. இதுபோன்ற இலவசங்களால் நாட்டின் நிதி நிலை கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே, இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.இந்த மனுவை நீதிபதிகள் விசாரித்து வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் தங்களையும் எதிர் மனுதாரராக சேர்க்கக்கோரி தி.மு.க., சார்பில் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு, தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தி.மு.க., சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தன் வாதத்தை எடுத்து வைத்தார்.
இதையடுத்து நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:

தேர்தல் நேரங்களில் இலவசங்கள் தொடர்பாக எந்த வாக்குறுதியும் அளிக்கக் கூடாது என, அரசியல் கட்சிகளுக்கோ, தனி நபர்களுக்கோ தடை விதிக்க முடியாது. இலவசங்களையும், மக்களின் நலனுக்காக செயல்படுத்தப்படும் நேர்மையான திட்டங்களையும் இணைத்துப் பார்த்து குழம்பக் கூடாது.வாக்காளர்கள் இலவசங்களை எதிர்பார்ப்பது இல்லை. மஹாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் போன்ற வாய்ப்பு கிடைத்தால், அதன் வாயிலாக நேர்மையான ஒரு வருவாயைத் தான் அவர்கள் எதிர்
பார்க்கின்றனர். அதேநேரத்தில், அரசு நிதி சரியான வழியில் செலவிடப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். நகைகள், 'டிவி' மற்றும் நுகர்வோர் மின்சாதன பொருட்களை இலவசமாக வழங்குவதற்கும், உண்மையான நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்கும் வேறுபாடு உள்ளது. இப்போது நம் கவலை என்னவென்றால், மக்களின் வரிப் பணம் சரியான முறையில் செலவிடப்பட வேண்டும். மக்களின் வரிப்பணம் இலவசம் என்ற பெயரில் வீணடிக்கப்படக் கூடாது என்ற கருத்து முன் வைக்கப்படுகிறது. எனவே, எது இலவசம் என்பதை வரையறை செய்ய வேண்டும்.

தேர்தல் நேர அறிவிப்புகளை ஒழுங்குபடுத்துவது என்பது மிகவும் சிரமமான காரியம். இது தொடர்பாக விரிவாக விவாதிக்க வேண்டும். எனவே, இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்து தரப்பினரும், இது குறித்த தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். இந்த வழக்கின் விசாரணை, வரும் 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்
படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
18-ஆக-202211:18:50 IST Report Abuse
raja டிவி மிக்ஸி, மின் விசிறி இனி கொடுப்போமுன்னு சொல்லி ஓட்டு கேட்க கூடாது ...திருட்டு திராவிடத்துக்கு சம்மட்டி அடி ....
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
18-ஆக-202210:16:11 IST Report Abuse
Narayanan it is very shameful event for India. We are celebrating 75 th independence day . But still parties are announcing frees only at the time of election. Once they have elected some of the promises goes in to the air. Government should provide every person should have stand independently . But we are unable to fulfill even after 75 years . At the same time the ruler keep on collecting taxes from every persons. Everything made by commercial ?
Rate this:
Cancel
Nellai tamilan - Tirunelveli,இந்தியா
18-ஆக-202210:02:12 IST Report Abuse
Nellai tamilan கடன் வாங்கி செயல்படுத்தப்படும் இலவச திட்டங்களுக்கு நீதிமன்றங்கள் தடை விதிக்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X